English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Chaparajos, chaparejos
n. pl. பாதுகாப்பிற்காக மாட்டிடையர்கள் அணியும் தோல் காற்சட்டை.
Chaparral n.
பசுமை மாறாக் குறுமரப் புதர்க்காடு.
Chap-book
n. மக்கள் விரும்பும் சிற்றேடு, விற்பனையாளர் அதிகமாக விற்கும் சிறு புத்தகம்.
Chape
n. வாளுறை முனையிலுள்ள உலோகத் தகடு, போர்க்கருவியின் உறையை அரைக்கசையோடு இணைக்கும் கொளுவி, அரைக்கச்சையின் சறுக்கு வளையம்.
Chapeau
n. (பிர.) தொப்பி.
Chapeau-bras
n. (பிர.) முக்கோணத் தொப்பி.
Chapel
n. திருக்கோட்டம், தனிப்பட்ட தொழுகையிடம், சிறிய துணைத்திருக்கோயில், கோயில் வீடு, மனைவழிபாட்டிடம், நிறுவனங்களின் கோயில் மனை, கல்லறைக் கூடத்திலுள்ள தொழுமிடம், திருக்கோயிலில் தனிப் பலிபீடம் கொண்ட சிறு அறை, நாட்டுத் திருச்சபையினின்றும் வேறுபட்ட நெறியினர் தொழுமிடம், தனித் திருக்கோட்ட வழிபாடு, பாடகர்குழு, பல்லியம், அச்சு அலுவலகம், நாளச்சுத் தொழிலாளர்கள் சங்கம், நாளச்சுத் தொழிலாளர்கள் கூட்டம்.
Chapelle ardente
n. (பிர.) மாண்ட பெரியோர் உடல் பார்வைக்கு வைக்கப்படும் மாடம்.
Chapelry
n. திருக்கோட்ட ஆட்சி வரம்பு, தனித் திருக்கோயிலின் ஆட்சி எல்லை.
Chaperon, n.
இளம் பெண்ணின் துணைக்காவல் மாது, தலை மூடாக்கு வகை, தொப்பி வகை, (வி.) காப்புத் துணையாகச் செயலாற்று.
Chapfallen
a. முக வாட்டமான, சோர்ந்த நிலையுடைய, கிளர்ச்சியற்ற.
Chapiter
n. தூண் முகடு, தூணின் தலைப்பு.
Chaplain
n. தனி மதகுரு, குடும்பப் புரோகிதர், சங்கச் சார்பான சமய வினைஞர்.
Chaplaincy
n. குடும்பப் புரோகிதர் வருமானம், சங்கச் சமய வினைஞர் பதவி.
Chapless
-1 a. கீழ்த்தாடையற்ற.
Chapless
-2 a. வெடிப்பற்ற, பிளவில்லாத.
Chaplet
n. தலைமாலை, சூளிகை, தலையணிமணி, பொன் முடிச்சூட்டு, தொழுகைக் குறுமணி மாலை, கழுத்தணிமணிமாலை, குழாயின் உலோக அடிதாங்கி, தேரையின் முட்டை வரிசை, கோவை.
Chapleted
a. தலைமாலையணிந்த.
Chapman
n. (வர.) சிறு வணிகன்.
Chapped
a. வெடிப்புடைய, பனி வெடிப்பினால் தோல் தடித்த, வெப்ப வெடிப்பினால் மண் கெட்டியான, குறுகத் தறித்த.