English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Charcoal
n. கரி, கட்டைக் கரி, தீய்ந்து கரியான மரக்கட்டை.
Charge
n. தாக்குதல், மோதல், குற்றச்சாட்டு, சுமை, பாரம், துப்பாக்கி கொள்ளத்தக்க வெடிமதின் முழு அளவு, பொறுப்பு, பாதுகாப்பு, பொறுப்பாணை, காவற் கட்டளை, காப்புப்பொருள், காப்புக்குரியவர், அறிவுறுஉ, விலை, சத்தம், கட்டணம், கடமை, (வி.) தாக்கு, திடீரென மோது, சுமத்து, பாரம் ஏற்று, திணி, உள்ளிடு, நிரப்பு, அடை, மின் விசை செறிவி, குற்றஞ்சாட்டு, பொறுப்பேற்று, ஒப்படை, காப்பாணையிடு, பொறுப்பாணையிடு, வரி விதி, கட்டணம் கூறு, ஆதாயப் பங்கு எடுத்துக்கொள், விலைகுறி, (கட்.) கேடயத்தில் மரபுச் சின்னம் பொறி, அறிவுறுத்திக் கூறு.
Charge daffaires
n. (பிர.) துணைநிலைத் தூதுவர், செயல் தூதுவர், தற்காலிகப் பொறுப்பாட்சியாளர்.
Chargeable
a. குற்றஞ்சாட்டப்படத்தக்க, கட்டணம் கோருவதற்குரிய, வரி விதிப்பதற்குரிய, செலவினமாக ஒதுக்கப்படத்தக்க, செலவாகச் சேர்க்கப்படுதற்குரிய.
Charge-hand, charge-man
n. பணியாட்டுக்குழுத் தலைவன்.
Charger
n. தாக்குபவர், செறிவூட்டி நிரப்புபவர், போர்க் குதிரை.
Charges
n. pl. செலவுகள், சிறு செலவினத் தொகுதி.
Charge-sheet
n. குற்ற அறிக்கை, குற்றவாளிகளின் மீது சாட்டப்பட்ட குற்றங்களின் பட்டியல்.
Chargin
n. கடும் ஏமாற்றம், ஆரஞர்த் தன்னொடுக்கம், மன உராய்வுத் துன்பம், உள அரிப்பு, (வி.) ஏமாற்றமடைவி, மன எரிச்சலுட்டு.
Charily
adv. மட்டற்ற எச்சரிக்கையுடன், தயக்கத்துடன், சிறிது சிறிதாக, கஞ்சத்தனமாக.
Chariness
n. கஞ்சத்தனம், மட்டவற்ற தயக்கம்.
Chariot
n. தேர், இரதம், நாலு சக்கரமுள்ள அரசாங்க வண்டி, போர்ச்சகடம், வெற்றியூர்தி, (வி.) தேரில் ஏற்றிச் செல், இரதத்தில் ஏறிச்செல்.
Charioteer
n. தேர்ப்பாகன், இரதமோட்டி, (வி.) தேரோட்டு, தேரேறிச்செல்.
Charitable
a. பெருந் தன்மையுள்ள, விட்டுக்கொடுக்கிற, அறச்சிந்தனையுடைய, உதவிசெய்கிற.
Charitableness
n. அன்பிணக்கமுடைமை, ஒப்புரவு, அற ஈடுபாடுடைமை, பரந்த மனப்பாங்கு.
Charitably
adv. அன்போடு, அறச்சிந்தனையோடு, பெரிய மனத்துடன் விட்டுக்கொடுத்து.
Charity
n. மன்பதை அன்பு, நன் மனப்பாங்கு, அன்பிணக்கம், தாராள மனப்பான்மை, ஒப்பரவு, இன்னலம், பெருந்தன்மை, விட்டுக்கொடுத்தல், அருளிரக்கம், ஈகை, அறம், அற நிலையம்.
Charity-boy
n. அறக்கொடை நிறுவனத்தின் ஆதரவில் படிக்கும் மாணவன்.
Charity-girl
n. அறக்கொடை நிறுவனத்தின் ஆதரவில் படிக்கும் மாணவி.
Charity-school
n. அறக்கொடை நிறுவனப்பள்ளி.