English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Chance-medley
n. (சட்.) வேண்டுமென்றே செய்யப்படாத ஆட்கொலைக் குற்றம், கவனக் குறைவால் தீங்கு மிகுதிப்பட்ட குற்றம்.
Chancery
n. சட்ட மேல்மன்றத்துக்கு அடுத்தபடியான நீதித்துறை முதல்வர் மன்றம், பொதுநேர்மைத் தனி மன்றம், உயர் நீதிமன்றத்தின் பொது நேர்மைப் பிரிவு, பணித்துறைப் பதிவேடகம்.
Chances
n. pl. இடையூறுகள், வாய்ப்புக்கேடுகள், நலந்தீங்கு வாய்ப்புக்கள், வெற்றி தோல்வி வாய்ப்புக்கள்.
Chancre
n. கிரந்திப்புண், மேகப் பிளவை.
Chancroid
-1 n. தொற்றுமூலமாக மட்டுமே வரும் கிரந்தி நோய்வகை.
Chancroid(2), chancerous
a. கிரந்திப்புண் உடைய, கிரந்திப்புண் சார்ந்த.
Chandelier
n. சரவிளக்குச் சட்டம், கொத்து விளக்குச் சட்டம்.
Chandler
n. மெழுகுத்திரி செய்பவர், மெழுகுத்திரி விற்பவர், எண்ணெய் சவுக்காரம் முதலிய சில்லறைப் பொருள் விற்பனையாளர், பலசரக்கு வணிகர்.
Chandlering
n. பல்பொருள் வாணிகம், பலசரக்கு விற்பனை.
Chandlery
n. பல்பொருள் வணிகர் விற்கும் சரக்கு, மெழுகுத்திரி செய்யும் இடம், சிறுவாணிகக் கிடங்கு.
Change
n. மாற்றம், மாற்றுதல், மாறுதல், ஆள்மாற்றம், இடமாற்றம், காலமாறுபாடு, பொருள்மாறுபாடு, பகரமாதல், பதிலாக அமர்த்துதல், வேறுபாடு, மாறுபாடு, திரிபு, விகற்பம், அலைவு, உலைவு, சில்லறை, மாற்றீடுபாடு, மாறுபாட்டுணர்வு, காசுமாற்றம், செலவாணியிடம், (வி.) மாற்று, வேறுபாடு செய், ஒன்றுக்கு மற்றொன்றைக் கொடு, நிலைமாற்று, பண்டமாற்று, கைமாறு, கொடுக்கல் வாங்கல் செய், மாறு, உடைமாற்று, ஊர்தி மாற்று.
Change all
அனைத்தும் மாற்று
Changeability
n. நிலையில்லாத தன்மை, மாறுபரம் ஆற்றல்.
Changeable
a. மாறுபடக்கூடிய, திரிபுடைய, நிலையற்ற.
Changeful
a. மாறுதல் நிறைந்த, அடிக்கடி மாறுபடக்கூடிய.
Changeling
n. மாயக்குழந்தை, திருடராலோ குறும்புத் தெய்வங்களாலோ மாற்றப்பட்டக் குழந்தை, வளர்ச்சிக் குறையுற்றவர், அறிவு மழுங்கியவர்.
Change-over
n. முறைமாற்றம்.
Changer
n. ஒன்றின் உருவினை மாற்றுபவர், செலவாணியிலீடுபடுத்தப்படும் இடையீட்டாளர்.
Channel
-1 n. நீர்க்கால், வாய்க்கால், கால்வாய், அகல் இடைகழி, கடற்கால், கப்பல் செல்லத்தக்க கடலிடைவழி, நீர் செல்வழி, பள்ளம், சாக்கடை, செலுத்தும் வழி, (வி.) கால்வாய் உண்டுபண்ணு, பள்ளம் வெட்டு, கொண்டு செலுத்து.