English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Down-turn
n. கீழ்நோக்கிய போக்கு, தளர்வு.
Downward
a. கீழ்நோக்கிய, கீழ்த்தளம், நோக்கிச்செல்கிற, கீழ்முகமான, கீழ்நோக்கிய, இழிவுநிலை நோக்கிககச் செல்கிற, நிலவுலக மைய நோக்கிய, விழுவாய்நோக்கிச் செல்கிற, விழுவாயின் பக்கமுள்ள, இறங்கிச் செல்கிற, கீழ்நோக்கிச்சரிகிற, தாழ்வான, தாழ்பகுதி சார்ந்த, வாட்டமுள்ள, நிகழ்காலம் நோக்கிய, பிற்பட்டகாலம் நோக்கிய, காலமரபு வழிப்பட்ட, (வினையடை) கீழ்நோக்கி, கீழ்த்தளம், நோக்கி, கீழ்முகமாக, இழிநிலைநோக்கி, தாழ்வான நிலைக்கு இழிந்து, இறங்குமுகமாக, முற்காலத்திலிருந்து பிற்பட்ட காலத்தை நோக்கி, மரபுவழியில், விழுவாய்ப் பக்கமாக, கீழிடத்தில், கீழ்ப்பகுதியில்.
Downwardness
n. தாழ்நிலை, அமிழும்பண்பு,
Downy
-1 a. தூவிபோர்த்த, மெல்லிறகுகளால் இயன்ற, தூவிபோன்ற, பட்டுப்போன்ற மென்மயிர் போர்த்த, மென்மயிர் இயல்புடைய.
Downy
-2 a. பாலைமேட்டுநிலம் போன்ற, பாலைமேட்டுநிலத்துக்கு உரிய.
Dowry
n. சீதனம்., பரிசம், பரியம், திடருமணத்தின்போது மனைவி கணவன் வீட்டுக்குக் கொண்டுவரும் உடைமை, இயற் பண்பு, இயல்புத் திறம்.
Dowse
v. மண்ணின் கீழே தண்ணீரோ கனிப்பொருளே இருப்பதைக் கண்பிடிக்க உதவும் கோலைப் பயன்படுத்து.
Dowser
n. மண்ணின் கீழே தண்ணீரோ கனிப்பொருளோ இருப்பதைக் கண்டுபிடிப்பவர்.
Dowsing
n. அடிநல ஊற்றாய்வு, அடிநிலக்கனியுண்மை ஆய்வு, மண்ணின் அடியில் தண்ணீரோ கனிப்பொருளோ இருப்பதைக் கண்டுபிடிக்க உதவும் கோலைக்கொண்டு அவற்றைத் தேடுதல்.
Doxology
n. கடவுட் புகழ்ச்சி வாய்பாடு.
Doxy
-1 n. சமயமுடிவுகள் பற்றிய கருத்து.
Doxy
-2 n. பிச்சைக்காரப்பெண், விலைமகள்.
Doyen
n. மூப்பர், சங்கத்தின் மூத்த உறுப்பினர், தூதுக் குழுவின் முதல்வர்.
Doze
n. சிறுதுயில், அரையுறக்கம், (வினை) சிறுதுயில்கொள், அரைத் தூக்கத்திலிரு, சோம்பிய அல்லது உணர்வுமழுங்கிய நிலையிலிரு, சோம்பலாகக் காலங்கழி.
Dozen
n. பன்னிரண்டன் தொகுதி, பன்னிரெண்டு, (பெயரடை) பன்னிரண்டன் தொகுதியான, பன்னிரண்டான,
Dozens
n. pl. ஒவ்வொன்றும் பன்னிரண்டுகொண்ட வேறு வேறு தொகுதிகள், பன்னிரண்டு கணக்கிலுள்ள தொகுதி.
Dozy
a. அரைகுறைத்தூக்க நிலையிலுள்ள, அழுகத் தொடங்குகிற.
Drab
-1 n. பரத்தை, விலைமகள், (வினை) விலைமகளிருடன் உருவாடு.
Drab
-2 n. மங்கலான இளம்பழுப்பு நிறம், கனத்த உறுதியான பழுப்புத்துணி, கவர்ச்சியின்மை, வேறுபாடில்லாமை, சலிப்பு, (பெயரடை) மங்கலான் இளம்பழுப்பு நிறமுள்ள, கவர்ச்சியற்ற, வேறுபாடில்லாத சலிப்புத்தருகிற.
Drabbet
n. தொழிலாளியின் மேலாடையாகப் பயன்படும் முரட்டு நார்த் துணியுடை.