English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Drabble
v. நீரில் துளைந்து செல், நீர்தெறிக்கும்படி போ, நீர் அல்லது சேற்றைக்கொண்டு நனைந்து அழுக்காக்கு.
Drabbling
n. நீண்ட கயிறுடன் கூடிய தூண்டிலைக் கொண்ட நன்னீர் மீன்வகையினைப் பிடிக்கும் முறை,
Drabby
a. கீழான, ஒழுக்கங்கெட்ட.
Dracaena
n. குங்கிலிய வகை தருவதற்குப் பேர்போன கானரித் தீவுப்ளைச் சேர்ந்த மர இனம்.
Drach, ma
பண்டைய கிரேக்க வௌளி நாணயம், தற்கால கிரேக்க நாணயம்,. பண்டைய கிரேக்க எடுத்தலளவைக்கூறு.
Drachm
n. பண்டைய கிரேக்க வௌளிநாணயம், எடுத்தலளவைக்கூறு (60 கிரெய்ன் அல்லது அரைக்கால் அவுன்சு) சிறிதளவு.,
Draconian, Draconic
சட்டங்கள் வகையில் கடுமையான, விடாக்கண்டிப்பான, கொடுமையான.
Draff
n. மண்டி, கழுநீர், சக்கை, கழிவு, கழிசாக்கடை.
Draft
n. இழுவை, இழுக்கப்படும் பொருள், சுமை, தெரிந்தெடுத்தல், பொறுக்கியெடுக்கப்பட்டவர்கள், சேனைத்தளம், படைப்பிரிவில் ஒருவர், உண்டியல், காசோலை, வேண்டுதல், பணம் எடுக்க வேண்டிய தேவைநிலை, வளம் பயன்படுத்த வேண்டிய நிலைமை, பண்பின் தேவை, திடட்ரடம், முன்வரிவு, பூர்வாங்கத்திட்ட வரைவு, (க.க) கல்முகப்பின் ஓரத்தில் உளிகொண்டு ஒழுங்கு செய்தல், (வினை) வரைச்சட்டம் எழுது, முன்னீடான உருவரை தீட்டு, தெரிந்தெடு, ஆய்ந்தெடு, பிரித்தெடு, பொறுக்கு, முன்வரிவு செய், (க,க) கல் முகப்பின் ஆரத்தில் உளிகொண்டு ஒழுங்குசெய்.
Drafter
n. முன்வரிவமைப்போர், எழுத்துப்படிவம் உருவாக்குபவர்.
Draft-horse
n. பாரம் இழுக்குங் குதிரை.
Draftsman
n. உருவரைப்படங்கள் எழுதுபவர், ஆவணங்களவரைபவர், மசோதாக்களை உருவாக்குபவர்.
Drag
n..இழுவை, இழுக்கப்படும்பொருள், இழுப்பு, சுணக்கம், வானுர்தியில் ஊடச்சின் நெடுகக் கிடக்கும் காற்றின் விரைவியக்கப்பகுதி, பாதாளக்கரண்டி, கனத்த பரம்பு, முரட்டுச் சம்மட்டி, மரக்கட்டையை இரம்ப வாய்க்குக் கொண்டு செலுத்துதற்கான பொறியமைப்பு, அஞ்சல் வண்டி, குறுக்காக இருக்கைகள் உள்ள கூண்டில்லாத நீண்ட வண்டி, இறங்கு சரிவிற் செல்லும் வண்டி சக்கரத் தடைக்கட்டை, முன்னேற்றத்தடை, மோப்பநெறி, நரி வேட்டையாடும் நாய்கள் பின்பற்றிச் செல்வதற்காக தரையின் மேல் இழுக்கப்படும் செயற்கை மோப்ப அமைவு, மேடைக்கோல் பந்தாட்டத்தில் பந்தின் மையத்துக்குச் சற்றுக் கீழே தட்டுவதனால் விளையும அப்பந்தின் தடைப்பட்ட செலவு, மந்த இயக்கம், இழுப்பு வலை, உரம் வாரி, (வினை) பிடித்து இழு, மெல்ல இழு,. நிலமீது உராயவிட்டு இழுத்துச்செல், வலுக்கட்டாயமாக முரட்டுத்தனமாய் இழு, மோப்பம்பிடித்துச் செல், பரம்படி, பாதாளக்கரண்டி போட்டுத் தேடு, தடைப்பொறி பொருத்து, தரையிற் படருமாறு தொங்டகு வலுக்கட்டாளமாக இழுபட்டுச் செல், கனத்த அடி வைத்து மெதுவாகச் செல், பின்தங்கு, மெல்ல நட மிக மெதுவாயிருப்பதாகத் தோன்று, இழுத்துப் பறித்துக்கொண்டிருப்பதாகத் தோன்று, சோம்பியிரு.
Drag-bar
n. இருப்பூர்திவண்டிகளை இணைப்பதற்குப் பயன்படுங்கோல்.
Drag-chain
n. சக்கரத்தின் இயக்கததைத் தடைப்படுத்தும் பொறியாகப் பயன்படுத்தப்படும் சங்கிலி,. இருப்பூர்தி வண்டிகளை இணைப்பதற்கான சங்கிலி.
Dragee
n. மருந்து-பொட்டை-பழம் முதலியவற்றைப் பொதித்துள்ள தின்பண்ட வகை.
Draggle
v. தரையின்மேல் இழுத்து நனைத்து அழுக்காக்கு, தரையின் மேல் நனைந்து தொங்கிக்கொண்டே இழுபட்டுச் செல், பின்தங்கு, பின்தங்கித் திரி.,
Draggle-tail
n. தூய்மையற்றவள், பாங்கற்றவள், சீர்கேடி,.
Draghound
n. மோப்ப நெறியைப் பின்பற்றிச் செல்லப்பழக்கப் பெற்றுள்ள நரிவேட்டை நாய்.