English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Drill-master
n. உடற்பயிற்சி ஆசான்.
Drill-plough
n. பத்திபத்தியாக வித்துவிதைக்கும் கொறு கலப்பை.
Drill-sergeant
n. போர்வீரர்களுக்குப் பயிற்சியளிக்கும் படைத்தலைவர்.
Drily
adv. கடுகடுப்புடன், உணர்ச்சியின்றி, கிளர்ச்சியின்றி, கவர்ச்சியில்லாமல்.
Drink
n. குடி, குடித்தல், குடிக்கும்பொருள், பருகுநீர்மம், குடிக்கும் அளவு, இன்குடி நீர்ம வகை, வெறிக்குடி வகை, மட்டுமீறிய குடி, குடிமயக்க நிலை, குடிவகையடங்கிய குவளை குவளையிலுள்ள குடிவகை, (வினை) குடி, பருகு, குடிவகை பயில், குடிகாரனாயிரு, செடிகள் வகையில் நீர் உறிஞ்சு, ஆவலுடன் படி, அவாவுடன் மனத்துட்கொள், புலன்கள் வாயிலாக ஆர்வத்துடன் நுப்ர்.
Drinkable
n. பானவகை, பருகுதற்குரிய பொருள், (பெயரடை) குடிக்கத்தக்க, பருகுதற்கினிய.
Drinker
n. குடிப்பவர், குடிப்பழக்கமுடையவர், அடிக்கடி குடிப்பவர்.
Drinking
n. குடித்தல், மதுபானப் பழக்கம், (பெயரடைடி) குடிக்கத்தக்க, குடித்தற்கான.
Drinking-bout
n. குடிக்கும் நெறி, வெறிக்குடிப்பு.
Drinking-water
n. குடிநீர், குடிப்பதற்குரிய நன்னீர்.
Drink-money
n. சாராயம் வாங்கிக் குடிப்பதற்கான படி, பணிக்கொடை, உதவித்தொகை.
Drink-offering
n. தெய்வத்துக்குப் படைக்கப்படும் குடிநீர்ம வகை.
Drinks
பருகுணா, குளிர்பானம், பானங்கள்
Drip
n. துளிகளாக விழுதல், சொட்டுச்சொட்டாக வடியும் நீர்மப்பொருள், வாரி, கூரைவிளிம்பு, (வினை) துளிதுளியாக விழு, சொட்டு, நீர்மம் தோய்வுற்று நனைந்து சொட்டு, குருதி வகையில் சொட்டுச்சொட்டாக வடி.
Drip-drop
n. இடைவிடாது சொட்டுதல்.
Dripping
n. சொட்டுச்சொட்டாக வடிதல், சொட்டுச் சொட்டாக வடியும் பொருள், பொரியும் பண்டத்திலிருந்து வடியும் நெய்,
Drippings
n. pl. வடிநெய், பொரியும் பண்டங்களிலிருந்தோ வேறு பொருள்களிலிருந்தோ வடியும் நெய் அல்லது நிணப்பொருள், வடிநீர்த்திரள்.
Drip-stone
n. மழைத்துளிகளை அப்பால் விழச் செய்யும் வாசற்படி முதலியவற்றின் மேலுள்ள கட்டமைவு.
Driptip
n. மேல்விழும் மழைத்துளிகளை வடிய விடுதற்கான இலையின் நீண்ட நுனிப்பாகம்.
Drive
n. ஊர்தியில் உலாப்போக்கு, சிறு சுற்றுலா, வண்டிப்பாதை, தனிமனையெல்லைக்குட் செல்லும் வண்டிப்பாதை, ஊக்கமிக்க பந்தடி, வேட்டை விலங்கின் கலைப்பு விரட்டு, வேட்டை விரட்டாட்டம், துரத்துவதற்குரிய பொறியமைவு, போரில் எதிரிகளைத் துரத்தி ஓட்டுதல், தெம்பு, செயலுக்கம், தூண்டுதல், உள்ளவா, குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கான பொருள் தண்டுமியக்கம், குறைவிலை விற்பனைப் பெருக்கத்துக்குரிய திரள் முயற்சி, (வினை) துரத்து, அச்சுறுத்தி ஓட்டு, வலிந்து விரட்டு, அடித்து வெருட்டு, காலட்நடைகளை நடத்திச் செல், காட்டுச் சட்டப்படி உடைமை உரிமை உறுதிப்பாட்டுக்காகக் கால்நடைகளை மந்தை விரட்டுக்குத் துரத்து, வேட்டை விலங்குகளைக் கலைத்து விரட்டு, ஊர்தியினைச் செலுத்து, வண்டியோட்டியாகச் செயலாற்று, ஏறிச்செல், இட்டுச்செல், உடன்கொண்டு செல், பொறியினை இயக்கு, இயங்கும் ஆற்றல் அளி, இயங்குவி, ஆற்றலுக்கு உட்டபட்டு இயங்கு, இயங்டகும் ஆற்றல் அளி, இயங்குவி, ஆற்றலுக்கு உட்பட்டு இயங்கு, இயக்கப்பெறு, செலுத்தப்பெறு, குறிக்கொண்டு செல், விரைவுபடுத்து, ஊக்கு, தூண்டு, தாக்கு., வேகமாகத் தள்ளு, பந்தினை வீசி எறி, முன்னேறிச் செல்லுவி, வாதத்தை ஆற்றல்படப் பயன்படுத்து, எழுதுகோல் முதலிய கருவிகளைக் கையாளு, வாளை வீசியெறி, தொழிலை நடத்து, ஆணி முதலியவற்றை அடித்திறுக்கு., பாய்ச்சு, பாய், குதி, விரை, விரைந்து செயலாற்று, கடுமையாக வேலைசெய்.