English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Dropping
n. கீழே போடப்படுவது.
Drops
n. pl. கீழே விழுந்த பொருள்கள், துளியாக விழுந்த பொருள், மெழுகுதிரிகளினின்றும் வழிந்த மெழுகு, விலங்குகளின் சாணம், பறவைகளின் எச்சம்.
Drops
n. துளிமருந்து, துளியாகப் பயன்படுத்தப்பட வேண்டிய மருந்து.
Dropsy
n. (மரு) நீர்க்கோவை, மகோதரம், உடலின் புழையிடங்கள் தோறும் நீர்திரண்டு தேங்குவிக்கும் நோய்.
Droshky. Drosky
n. ருசிய நாட்டுக்குரிய தாழ்வான நான்கு சக்கர வண்டி வகை, செர்மனி நாட்டின் நான்கு சக்கர வாடகை வண்டி.
Dross
n. உருக்கிய உரேலாகக் கழிவு, மாசு, களிம்பு, துரு, கசடு, கழிவுப்பொருள், கலப்படத்தில் கலக்கப்பட்ட அயற்பொருட்கூறு, சக்கை, சவறு, தீயவழியில் ஈட்டிய பணம்.
Drossy
a. கசடு போன்ற, தூய்மையற்ற, பயனற்ற.
Drought
n. வறட்சி, கருப்பு, நீடித்த பஞ்சநிலை, மழையின்மை, நீரின்மை, காய்வு, வெப்பு, நீர்வேட்கை.
Droughty
a. மிகுவறட்சியுள்ள, மழையற்ற, நீர்வேட்கையுள்ள.
Drove
-1 n. மேய்ச்சல் மந்தை, மீன்திரள், கும்பு, கூட்டம், கலதச்சனது அகன்ற உளி.
Drove
-2 v. கால்நடை மந்தைகளை ஒட்டிச்செல், கால்நடை வணிகராகத் தொழில்புரி.
Drover
n. கால்நடை மந்தைகளைச் சந்தைக்கு ஒட்டிச் செல்பவர், கால்நடை வணிகர்.
Drowse
n. அரைத்தூக்க நிலை, (வினை) தூங்கிவிழு, தூங்கிவழி, சோம்பியிரு, மந்தித்திரு, தூங்கிவிழச்செய், உணர்வு மழுங்கச் செய், தூங்கி விழுந்து காலங்கழி.
Drub
v. மொத்து, தடியால், அடி, நையப்புடை, சண்டையில் தோல்வியுறச்செய், கருத்தை அறைந்து செலுத்து,
Drubbing
n. தடியாலடித்தல்.
Drudge
n. ஊழியவேலை, அடிமைவேலை, கொத்தடிமை, தொண்டுழிய வேலையாள், குறைந்த கூலிக்கு நிறைந்த வேலைசெய்து காலந்தள்ளுபவர், (வினை) அடிமைவேலை செய், குற்றேவல்புரி,. தொண்டுழியம், செய்.
Drudgery, drudgism
அடிமைவேலை., மட்டுமீறிய உழைப்பு, சுவையற்ற வேலை, கடுந்தொழில்,*,
Drug
n. மருந்துச் சரக்கு, வெறிமயக்கப்பொருள், விலை போகாப்பண்டம், (வினை) வெறிமயக்க மருந்து சேர்த்துக் கலப்படம் செய், வெறிமயக்கமருந்தூட்டு, மருந்து கொடு, மயக்கப் பொருள்களை வழக்கமாய் மிகுதியாக உட்கொள்ளுவி, அருவருப்பூட்டு, உவர்ப்பூட்டு.
Drug stores
மருந்துப் பண்டகம், மருந்துக் கடை