English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Detrited
a. ஒரே பாளம் சிதைந்துருவான, சிதறித்துண்டு துணுக்குகளான.
Detrition
n. உராய்வினால் வரும் நாட்படு தேய்வு.
Detritus
n. பிழம்புருவிலிருந்து தேய்ந்து உருவான பொருள், பாறை முதலியவற்றிலிருந்து தகர்வுற்றுருவான துண்டுத் துணுக்குகளின் திரள், சரளை மணல் வண்டல் முதலிய திரள் பொருள், சிதைவுகூளம்.
Deuce
n. மின்னணுவியக்கக் கணக்குமானி.
Deuce
-1 n. இரண்டு எண்ணுள்ள சீட்டு., பகடையில் இரண்டு, வரிப்பந்தாட்டத்தில் இரு கட்சிகளும் 40 எண்ணிக்கை பெற்றாலன்றி எக்கட்சியும் வெற்றிபெற முடியாநிலை, ஆட்டச் சரிதயக்கநிலை.
Deuce
-2 n. தீங்க, அஞர்த்தெய்வம், கொள்ளைநோய்.
Deuce-ace
n. பகடையில் இரண்டும் ஒன்றும் தொடர்ந்து விழுதல், பேரவப் பேறு, மிக மோசமான வாய்ப்புக்கேடு.
Deuced
a. பேய்த்தனமான, பாழாய்ப்போன, மிகப்பெரிய, மிகுதியான, (வினையடை) பாழான முறையில், மோசமாக, மிகுதியாக.
Deus exmachina
n. தெய்வக் குறுக்கீட்டுமுறை, காவியத்திலும் கதையிலும் நல்ல கட்டத்தில் தெய்வக் குறுக்கீட்டால் நெருக்கடி தீரவைக்கம் முறை.
Deus misereatur
ஆண்டவனே அருள்செய் எனத் தொடங்கம் சிறுபாடல்.
Deuteragonist
n. நாடகத்தில் முதல்வருக்க அடுத்த முக்கியத்துவமுடையவர்.
Deuterium
n. நீரகத்தின் இருமடித் திரிபெடைப் பொருள்.
Deuteronomist
n. விவிலிய நுலின் பழைய ஏற்பாட்டில் முழ்ல் ஐந்தேட்டுத் தொகுதியில் ஐந்தாம் ஏட்டுப் பிரிவை எழுதியவர், விவிலிய ஏட்டின் ஐந்தாம் பிரிவைத் தொகுத்தவர்.
Deuteronomy
n. விவிலிய நுலின் பழைய எற்பாட்டில் மோசெசுக்கு உரிமைப்படுத்தப்பட்டுள்ள முதல் ஐந்தேட்டுத் தொகுதியிள் ஐந்தாவது ஏட்டுப்பிரிவு.
Deutzia
n. வெண்பூவையுடைய புதர்ச் செடிவகை.
Deux-temps
n. விரை ஒத்திசை நடனவகை.
Devastate
v. பாழாக்கு, சூறையாடு.
Develop
n. மடிப்புவிரி, வளரச்செய், முதிர்ச்சியடையச் செய், வளர், முதிர்ச்சியுறு, உள்விளைவுறச் செய், உள் முதிர்வுறு, முகையவிழச்செய், மலர்ச்சியுறுவி, மலர்ச்சியுறு, உள்ளார்ந்த பண்புகளை வௌதக்கொணர், உருமலர்ச்சியுறு, கருவியல்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வௌதவரப்பெறு, படிப்படியாகத் தோற்றுவி, புறந் தோற்றுவி, வௌதக்கொணர்ந்து காட்டு, தோன்று, வௌதப்படு, தளை நீக்கி வௌதக்கொணர், சமதளப்படுத்து, விளக்கியுரை, பெரிதாக்கு, பெரிதாக, நிறைவு பெறுவி, நிறைவு பெறு, புது உபயோகத்துக்குக் கொண்டுவா, எளிதாகக் கிடைக்கச் செய், மேம்படுத்து, படிப்படியாக உஸ்ர்நிலையடைவி, எளிய படியிலிருந்து படிப் படியாகப் பன்மடிச் சிக்கற் படிகளுக்குக் கொண்டு செல், மேம்படு, உஸ்ர்நிலை பெறு, உயர்படிமையுறு, புதுநெறி கண்டு வளமுறுத்து, புதுவளம்பெறு, புதுவழிப்பட்டு விரிவுறு, நிலத்தை இயற்கைவளம் பெருக்கி வளப்பமுறுவி, இயல்வளமுறு, படைத்துறையில் தாக்குதல் உருவாக்கு, சதுரங்கத்தில் தாக்குதலில் முனை, நிழற்படச் சில்லை உரு விளக்கப்படுத்து, (கண) பெருக்க விளக்கப்படுகிறது.
Development
n. வளர்ச்சி, பெருக்கம், விரிவு, முன்னேற்றம், வௌதப்படுத்துதல், புதுவளம், வளர்ச்சி உண்டு பண்ணுதல், படிப்படியாக, வளர்தல், சிறிது சிறிதாக வௌதப்படுதல், (கண) தொடர் உருவத்தின் செயல் விளக்கம், விரிவாக்கம், புத்தாக்கம், (இசை) ஆளத்தி சுர ஏற்ற இறக்கம், பின்வரவிருக்கும் புதிய நிலைமை.
Developmental
a. வளர்ச்சி சார்ந்த, பெருக்கத்துக்குரிய உருமலர்ச்சி சார்ந்த, வளர்ச்சியோடு தொடர்புகொண்டுள்ள.