English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Deteriorate,
0*அழிகேடாக்கு, படுமோசம் ஆகு, படிப்படியான தரக்கறைவு உண்டாக்கு.
Determinant
n. தீர்வுப்பொருள், தீர்மானிக்கப் பயன்படுவது, முடிவு செய்ய உதவும் கூறு, இருபொருள் ஒரு சொல்லில் திரிபு சுட்டிப் பொருள் வரையறுக்கும் அடை மொழி, உயிரணு வளர்ச்சியின் போக்கை அறுதியிடுவதாகக் கருதப்படும் கூறு,. (கண) துணிகோவை, (பெயரடை) முடிவு செய்ய உதவுகிற, வரையறுக்கப் பயன்படுகிற.
Determinate
a. தீர்மானிக்கப்பட்ட, வரையறுக்கப்பட்ட, உறுதியான, நிலைப்படுத்தப்பட்ட, முடிவான, (தாவ) வளரா நுனியுடைய, நடுத்தண்டின் உச்சியில் மலருடைய.
Determination
n. உறுதி செய்தல், தீர்மானித்தல், முடிவு செய்யப்படுதல், உறுதி, மன உறுதிப்பண்பு, முடிவை நோக்கிய நாட்டம், கருத்துத் திட்பம், தௌதவான ஒரு புறச் சாய்வு உறுதி, திண்ணிய சார்பு, தொகை அறுதிப்பாடு, கால அறுதிப்பாடு, அறுதி, வரையறை, வழக்கு அறுதி, வாத முடிபு, (சட்) உடைமை உரிமை முடிவுறல்.
Determinative
n. பண்டை உரு எழுத்துமுறையில் பொருள் விளக்கத்திற்கான துணைக்குறி, (பெயரடை) அறுதி செய்கிற, எல்லைவரையறுக்கிற, எல்லை விளக்குகிற.
Determine
v. முடிவுசெய், உறுதிசெய், தீர்மானஞ்செய்வி, முடிவு தெரிவி, உறுதியாகத் தெரிந்துகொள், வரையறு., கட்டுப்படுத்து, எல்லை உறுதிசெய், உரு வரையறை செய், முடிவுக்கு வா (சட்) அறுதிக்கு வந்துசேர், வரையறை செய்யும் கூறாய் உதவு, கால அறுதிசெய், முன்கூட்டி வேளை குறி, வாத முடிவுசெய், செயலுக்கான ஆள் உறுதிப்படுத்து, நோக்கமளி, இயக்கு, தூண்டு.
Determined
a. கண்டறியப்பட்ட, உறுதிப்படுத்தப்பட்ட நிலையான, வளைந்து கொடாத, அசையா உறுதியுடைய, முன்பே வரையறுக்கப்பட்ட, கருத்துறுதி உடைய, தீர்மானமான, அறுதி செய்யப்பட்ட.
Determinism
n. நியதிவாதம், மனிதச்செயல் துணிபாற்றல் உள்ளடங்கலாக எல்லாச் செய்திகளும் புறப்பொருள் தூண்டுதலாற்றல்களாலேயே துணியப்படுகின்றன என்னும் கோட்பாடு.
Detersive
n. துப்பரவு செய்யும் பொருள், (பெயரடை) தூய்மைப்படுத்துகிற.
Detest
v. வெறுத்தொதுக்கு, அறவே வெறு, முனைப்பாக வெறுப்புக்கொள்.
Detestation
n. அறவே வெறுத்தொதுக்கதல், முழு வெறுப்பு.
Dethrone
v. தவிசிறக்கு, அரசுரிமையிலிருந்து தள்ளு, உஸ்ர்நிலையினின்று அகற்று.
Detinue
n. சொத்தைத் தவறாகத் தடைப்படுத்தி வைத்தல்.
Detonate
v. அதிர்வேட்டுப்போடு, முழக்கத்துடன் வெடிக்கச் செய், உள்வெப்பாலை இயந்திரத்தின் வகையில் சுததி ஓசை போன்ற அதிர்வுடன் வெடிக்கச் செய்.
Detonator
n. ஓசையுடன் வெடிக்கும் பொருள், வெடிப்பைத் தூண்டும் கருவி, புகைவண்டியின் மூடுபனி அறிவிப்பு அடையாள ஒலி.
Detour
n. சுற்றுவழி, வளைந்து செல்லும் வழி, இடைச்சுற்று வழி, மற்றொன்று விரித்தல்.
Detract
v. குறைவுபடுத்து, குறைவுபடச் செய், இழிவுபடுத்து, பெருமை குலை, நற்பெயரைக் கெடு, பழித்துக்கூறு, தரம் குறை, அளவிற் குறைபடு.
Detrain
v. புகைவண்டியிலிருந்து இறங்கு.
Detriment
n. தீங்க, கெடுதல், நட்டம், சேதம், குறைவு,
Detrimental
n. விரும்பத்தகாத குற்றங் குறைபாடுடைய காதல் வேட்பாளர், உடனிருப்பதால் மண இணைப்பு வாய்ப்பைக் குறைக்கத்தக்கவர், தீங்க தரத்தக்கவர், நட்ட முண்டாக்கக்கூடியவர், (பெயரடை) தீங்கு தரத்தக்க, நட்டமுண்டாக்கக்கூடிய.