English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Dissociation
n. தொடர்பறுத்தல், தொடர்பறுந்த நிலை, (உள) ஈருணர்வு மைய ஆக்கம், கருத்துத்தொடர்பு நீக்கம், குறிப்பிட்ட கருத்துக்களோ அவற்றோடு தொடர்புகொண்ட உணர்ச்சிகளோ தன்னறிவின்று துண்டிக்கப்படல், (வேதி) சேர்மானச்சிதைவு.
Dissociative
a. தொடர்பறும் போக்குடைய, பிரியும் இயல்புடைய, கட்டுச்சிதையும் தன்மைவாய்ந்த.
Dissoluble
a. கரையுமியல்படைய, கூட்டாக்கம் சிதைந்து தனிக்கூறுகளாகப் பிரியும் தன்மைவாய்ந்த, பிணிப்பவிழ்க்கப்படத்தக்க.
Dissolute
n. ஒழுக்கங்கெட்டவர், (பெயரடை) ஒழுக்கக்கேடான, நெறிதவறின, தீயொழுக்கமுள்ள.
Dissoluteness
n. ஒழுக்கக்கேடு, இழிந்தவாழ்க்கைப்போக்கு.
Dissolution
n. கரைவு, உருகுதல், சேர்மான ஆக்கச் சிதைவு, பங்காண்மைக் கூட்டுப்பிரிவு, கட்டவிழ்வு, மண உறவு முறிப்பு, நேசஉறவு கலைப்பு, அவைக்கலைப்பு, பொதுத் தேர்தலுக்கு முற்பட்ட சட்டமன்றக் கலைப்பு.
Dissolvable
a. கரைக்கத்தக்க, கரையக்கூடிய, கரையும் இயல்புடைய.
Dissolve
v. கரையச்செய், கரை, பனிக்கட்டி வகையில் உருகச்செய், உருகு, நீரியலாக்கு, நீரியலாகு, நீர்பெருக்கு, நீரில் தோய்வுறு, கூட்டுச் சிதைவி, சேய்மானம் பிரிவுறு. அவையினைக்கலை, அவைகலைவுறு, தேய்ந்துமறை, படிப்படியாக மறை, மறைவுறு, முடிவுறு, தள்ளுபடி,செய், தளர்வுறச் செய், தசைநார்கள் தளர்வுறவிடு.
Dissolvent
n. கரைப்பான், கரைக்கம் பொருள், (பெயரடை) கரைக்கும் இயல்புடைய.
Dissonance, dissonancy
n. ஒலிமுரண்பாடு, இசைகேடு, இசைமுரண்பாடு, முரண்பாடு, ஒவ்வாமை, பொருத்தக்கேடு.
Dissonant
a. கடுமுரண் ஒலியுடைய, இசையொவ்வாத, மாறுபட்டுள்ள, கரடுமுரடான, பொருந்தாத.
Dissuade
v. எதிராக அறிவுரை கூறு, அறிவுரைமூலம் மனம், திருப்பு, கருத்தை மாற்று, தூண்டிச் செயல்மாற்று, எதிர் வாதிட்டுச் செயல்படு, செயல்கடிந்துகொள், செயல் ஒப்புதலின்மை தெரிவி.
Dissuasive
n. மனத்தை மாற்றுவ, (பெயரடை) மனத்தை மாற்றத்தக்க, அறிவுரை மூலம் தடை செய்யத்தக்க.
Dissymmetrical
a. முற்றொப்பிசைவற்ற, எதிர்முக ஒப்பிசைவுடைய.
Dissymmetry
n. முற்றொப்பிசைவின்மை, எதிர்முக ஒப்பிசைவு, மெய்பொருந்தவைத்தால் பொருந்தாத இருபுறச் சீர் சமநிலை.
Distaff
n. நுற்புக்கழி, நுற்புக்கதிர், பெண்டிர்பணி.
Distal
a. மையத்தினின்று மிகளம் விலகிய, இணைவாயிலிருந்து நெடிதகன்ற, நெடிதுவிலகிய, இணைவாயிலிருந்து நெடிதப்ன்ற, நெடிதுவிலகிய, புறக்கோடியான, முனைகோடியான.
Distance
n. தொலைவு, தொலைவிடம், தொலைக்காட்சி, ஓவியத்தில் தொலைக்காட்சிப்பகுதி, தொலைவளவு, தூரம், இடைத்தொலைவு, இடைவௌதத்தொலைவின் அளவு, நீண்ட கால அளவு, பழகாது ஒதுங்கிகிடக்கும் பண்பு, பந்தய இடைப்போட்டிகளில் மேல்நடக்கும் பந்தயத்திற் கலப்பதற்கு உரிமையளிக்கும் எல்லையணுகு தொலையளவு, (வினை) தூரத்தில் வை, காட்சித்தொலைவுணர்வு உண்டுபண்ணு, நெடுந்தொலை பிந்தவை, விஞ்சி முன்னேறு.
Distanceless
a. மூடுபனிச் சூழலில் தூரப் பார்வைக்கு இடமில்லாத, படவகையில் தூர அளவுகாட்டும் வகைமுறை இல்லாத.
Distance-signal
n. தொலைவிவிலிருந்தே காட்டப்படும் அடையாள அறிகுறி.