English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Distribution
n. பாத்தீடு, எங்கும் பரப்பி வழஙகுதல், பங்கீடு, பகிர்ந்தளித்தல், பரப்பீடு, பரவலாகச் சிதறுதல், வகுத்தமைவு வகைப்படுத்தி ஒழுங்கீடு செய்தல், பிரிப்பீடு, அச்சில் எழுத்துருக்களைச் சிதைத்துத் தனித்தனி அறைகளிற் பிரித்திடுழ்ல், பரவற் பயனீடு, பயனீட்டாளர்களில் எல்லாத் தனிமனிதரும் வகையினரும் ஒருங்கே பங்கு கொள்ளும்படி செய்பொருள்களைப் பரப்பி வழங்கம் முறைமை, சொல்லின் பரப்புறழ்வு வழங்கு, (அள) சுட்டும் எல்லை முழுதும் பொருள் சென்று கூறுகூறாய்த் தனித்தனி பரவி உறழும் முறையிற் சொல்லை வழங்குதல்.
Distributive
n. தனியுறழ்வுச்சசொல்,குழுமுழுதும் பரவித் தனித்தனி குறிக்கிற சொல், (பெயரடை) பங்கிடுகிற, பரவிப்பிரித்துக் காட்டுகிற, தனித்தனி பரவிச் செல்கிற, குழு முழுதும் பரவித் தனித்தனி குறிக்கிற.
District
n. மாவட்டம், ஜில்லா, கோட்டம், நாட்டின் அரசியற் பிரிவு, மாகாணத்தின் பகுதி, முறைமன்றத் துறைகளுக்காகவோ வகுத்தமைக்கபட்ட நிலப்பிரிவு, வட்டாரம், நகர்ப்புற வட்டகை, தனித்திருக்கோயிலும் திருச்சபைப் பணி முதல்வரும் கொண்ட திருச்சபை வட்டகை, திட்ட நடவடிக்கைகளுக்காக ஒதுக்கிவிடப்பட்ட எல்லைப் பிரிவு, பொது இயல்புகளையுடைய திணைவட்டாரம், (வினை) மாவட்டங்களாகப் பிரி.
Distrust
n. அவநம்பிக்கை, ஐஸ்ம், ஐயப்பாடு, (வினை) அவநம்பிக்கை கொள், நமபிக்கைகொள்ளத் தயங்கு, ஐயுறவு கொள்.
Distrustful
a. அவநம்பிக்கையுடைய, ஐயப்பாடு செறிந்த, ஐயுறுகிற, ஐயுறும் இயல்புடைய.
Disttinguish
v. வேறுபடுத்திக் கண்டறி, கேட்டு அடையாளம் காண், வேறுபாடு காட்டு, வேறுபடுத்திக்காட்டு, வகை வேறுபாடாமை, பண்பு வேற்றுமையாகு, தனிக் குறியாகத் திகழ், சிறப்படையாளமாக விளங்கு, மேம்படுத்திக் காட்டு, சிறப்புக்குரியவராக்கிக்கொள்.
Disturb
n. கலைவு, (வினை) அமைதிகுலை, உலைவுசெய், இடையிட்டுத் தடு, தொல்லைகொடு, குழப்பு, கலக்கு, கிளர்ச்சி செய்.
Disturbance
n. குழப்பம், கலக்கம், தடுமாற்றம், கொந்தளிப்பு, கிளர்ச்சி, அமளி, ஆரவாரம், தொடர்பு கலைவு, இடைத்தடை, இடையீடு, அமைதிகுலைவு, உலைவு, பூசல், சச்சரவு, தொந்தரவு, உடைமை உரிமையில் தலையீடு.
Disturbant
n. அமைதிகுலைப்பவர், அமைதி குலைப்பது, (பெயரடை) அமைதி குலைக்கிற.
Disunion
n. ஒற்றுமையின்மை, பிரிவு, பொருந்தாமை, இசைவுக்கேடு, வேற்றுமை.
Disunite
v. கூட்டிலிருந்து பிரி, கூட்டுப்பிரி, பிரிவுசெய், ஒற்றுமை கெடு, பிரிவுறு, பிளவுறு.
Disunity
n. ஒற்றுமைக்கேடு, ஒற்றுமையின்மை.
Disuse
n. வழக்கொழிவு, வழங்காமை, வழக்காறின்மை, பயனொழிவு, பயிலாமை, (வினை) வழங்காதொழி, வழக்கொழி.
Disutility
n. இடையூறு, தடங்கல், வாக்கப்போக்குக் கேடு.
Disyllable
n. ஈரசைச்சொல், ஈரசைச்சீர்.
Ditch
n. குழி, பள்ளம், அகழ்,நீர்வடிகால், பந்தாடுஞ் சமநிலத்தின் கரை, (வினை) குழி அகழ், பள்ளம், தோண்டு, அகழியைச் சீர்செய், வடிகாலைத் தூய்மையாக்கு, சூழ அகழிடு,. வடிகாலிட்டு நீர் வடியவை, வண்டி முதலியவற்றின் வகையில் பள்ளத்தில் மாட்டிக் கொள்ளும்பச் செய்.
Ditcher
n. குழிதோண்டுபவர், குழி தோண்டும் கருவி, பள்ளத்தைத் தூய்மை செய்பவர், பள்ளத்தைத் தூய்மை செய்யும் இயந்திரம், அகழி, செப்பனிடுபவர், அகழி செப்பனிடும் பொறி.
Ditch-water
n. சாக்கடைநீர், கட்டுக்கரை நீர்.
Ditheism
n. கடவுளர் இருமைக்கோட்பாடு, சமய இருமைக் கோட்பாடு, நன்மை தீமையாற்றல்கள் இரு வேறாகக் கொள்ளும் கோட்பாடு.
Dither
n. நடுங்கநிலை., நடுக்கம், நடுக்குவாத வலிப்பு, உணர்ச்சியார்வம், பரபரப்பு, துடிதுடிப்பு, மனக் கலக்கம், (வினை) நடுங்கு, துடிதுடி, குழப்பமடை தயங்கு தடுமாறு.