English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Effigy
n. சிறிய உருவப்படம், மாதிரி உருவம், நாணயத்தில் பொறிக்கப்பட்ட உரு, தலையுருப்பொறிப்பு.
Effloresce
v. பூத்துக்குலுங்கு, பொங்குமாவளமுறு, மலர்ச்சியுறு, பொடியார்ந்த தோட்டால் மூடப்பெறு, பொடியார்ந்த தோடாக உருப்பெறு, (வேதி.) பொருட்களின் மணி உருவகையில் திறந்த வௌதக்காற்றுப்பட்டுப் பொடிப்பொடியாகு, உப்புக்கள் வகையில் கலவையின் மேற்பரப்புக்கு வந்து மணி உருப்பெறு, நிலஞ்சுவர்ப்பரப்புக்கள், வகையில் உப்புப் பொலிவுறு.
Effloresceence
n. மலர்ச்சி, மலர்ச்சிப்பருவம்ம, உடலின் மேந்தோல் பெறும் செந்நிறத்தன்மை, பொடியார்ந்த மேல் தோடு, பொடியார்ந்த மேல்தோடு உருவாதல்.
Effluence
n. வழிந்தோடுதல், மற்றொன்றினின்று வௌதப்படுதல், ஔதயின் புற ஏழுச்சி, மின்வலியின் புறஒழுக்கு, புறஞ்செல்வது.
Effluent
n. ஏரியிலிருந்து வௌதச்செல்லும் ஆறு, மறிகால், மற்றோர் ஆற்றிலிருந்து பிரிந்தோடும் கிளையாறு, புறக்கிளைக் கால்வாய், புறக்கிளை ஓடை, கழிவுநீர்த் தொட்டியிலிருந்து வௌதச்செல்லும் வடிகால், கழிவு நீர்த் தேக்கத்துப்புரவு நீர்க்கால், தொழிற்சாலையிலிருந்து வௌதயேறும் நீரியற்கழிவு,(பெ.) புறஞ்செல்கின்ற, வழிந்தோடுகிற.
Effluvium
n. பொருளிலிருந்து வௌதப்படும் நுண்ணிய அணுக்கள், அழுகிய பொருள்களிலிருந்து வௌதப்படுகின்ற உடல்நலத்துக்கு ஒவ்வா வாடையுடைய தீயாவி, காந்தத் தால் வௌதயிடப்படுவதாகக் கருதப்பட்ட நுண் துகள் திரள்.
Efflux, effluxion
நீரியல் ஆவியியல் பொருள்கள் வகையில் புறநோக்கிய ஒழுக்கு, கடத்தல், புறவொழுக்கு,*,
Effort
n. ஊக்கம், முயற்சி, ஆற்றலை ஈடுபடுதத்திய செயல், அருஞ்செயல், தொடர்ந்த உழைப்பு, முயற்சியின் பயனாய் விளைந்த செய்தி, அருஞ்செயல் விளைவு.
Effortless
a. முயற்சியற்ற, எளிதான, முயற்சி எடுத்துக் கொள்ளாத, செயல்முனைப்பற்ற, தன்முயற்சியற்ற, ஏனோ தானோ என்றிருக்கிற.
Effrontery
n. வெட்கமில் ஆணவம், நாணழிவு, அகந்தை.
Effulge
v. ஔத துலங்கு, ஔதபெறு.
Effulgent
a. சோதியான, பொரொளி விடுகிற.
Effusion
n. (தாவ.) வழிந்துபோன, (வினை) ஊற்று, வௌதப்படுத்து, சிந்து, கொட்டு, இறை, வழி.
Effusive
n. அதிக அளவில் சொரிந்த, பீறிடுகின்ற மலைக்குரிய உருக்குப்பொருள் வௌதக்கொட்டிய, உறுதிப்படுத்தும் வகையில் அதிக உணர்ச்சி காட்டுகின்ற.
Egad
int. 'அட கடவுளேஸ்' என்னும் வியப்பு மொழி.
Egatherium
n. மரபற்றுப்போன கரடி போன்ற தழையுணிப் பெருவிலங்கு.
Egeria
n. பெண் ஆலோசகர், ஒரு குலதெய்வம்.
Egg
n. முட்டை, கரு, உயிரணு, ஈருயிரின்பச் சேர்க்கையின் உயர்விளைவு, கோழி முட்டை போன்ற பொருள், (வினை) தூண்டு, விரைவுபடுத்து.