English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Excavator
n. தோண்டுபவர், அகழ்பொறி.
Exceed
v. மிகைபடு, எல்லைபட, பெருகு, பெரிதாகு, உயர், மிகைபடச்செய், பெருக்கு, விஞ்சு, மேம்படு, முதன்மைநிலையடை.
Excel
v. விஞ்சு, மேம்படு, தகைமைபெற்றிரு, சிறப்புறு, அருஞ்செயல்புரி, சால்புறு, முதன்மைநிலை பெறு.
Excellence
n. சிறப்பு, நயநேர்த்தி, மேம்பாடு, மிகுநலம், சால்பு, தனித்தகுதி, முதன்மைநிலை.
Excellency
n. மேதகைமை, மண்டலிகர் தூதர் நிலையினரைச் சுட்டியுரைக்கும் போது பதிவிப் பெயரின் முன்னோதனித்தோ வழங்கப்படும் மதிப்படைமொழிப்பட்டம், ஆளுநர் மனைவியர் பட்டம்.
Excellent
a. நேர்த்திவாய்ந்த, மேம்பட்ட, மிகச்சிறந்த, ஈடெடுப்பற்ற, ஒப்புவமையற்ற, முதல்தரமான.
Except
v. விதிவிலக்காக்கு, சேர்க்காமல் ஒதுக்கிவிடு. தனி விலக்களி, எதிர்த்துத் தடங்கல் கூறு.
Exception
n. விதிவிலக்கு, விதிவிலக்கான பொருள், வழக்க மீறிய செய்தி, இயல்புமீறிய ஒன்று, தடை எதிர்ப்பு.
Exceptional
a. விதிவிலக்கான, பொதுநிலைமீறிய, வழக்க மீறிய, இயல்புகடந்த, தனிச்சிறப்புவாய்ந்த.
Excerpt
n. நுலிலிருந்து எடுத்த பகுதி, சங்க நடவடிக்கைகளிலிருந்து தனியாக அச்சிடப்பட்ட கட்டுரை, (வினை) நுலிலிருந்து ஒரு பகுதியை எடு, தனிமேற்கோளாக எடுத்துக்காட்டு.
Excess
n. மிகுதி, மிகைபடு, விஞ்சிய அளவு, வரம்பு கடந்த மிகையளவு, மிகையளவுப்பொருள், மிகையளவுத்தொகை, இடைமிகைவேறுபாடு, ஊர்தி முதலிய வற்றின் சீட்டில் கீழ்ப்படியை மேற்படிகளாகுவதற்கு வேண்டிய இடைவேறுபாட்டு வகை, வழக்கமீறிய எல்லை, இயல்பு கடந்த அளவு, மடடுமீறிய பழக்கம், பேரூன், பெருங்குடி, ஒழுக்கவரம்புக்கேடு, வரம்புகடந்த செயல், அடாச்செயல், அட்டுழியம்.
Exchange
n. பரிமாற்றம், கொடுக்கல்வாங்கல் முறை, பண்டமாற்று, அடிதடிச்சச்சரவுகளில் இருதிறக் கைகலப்பு, சொல்வீச்சுவாதங்களில் இருபுற இடைக்கலப்பு, கொள்வினை கொடுப்புவினை, செயல் எதிர்ச்செயல், கைதிகள் கைமாற்றம், படைக்குப் படை படைவீரர் பரிமாற்ற ஏற்பாடு, நாணயமாற்று, அயல்நாடுகள் நாணயப் பரிமாற்ற ஏற்பாடு, நாணயமாற்று, இடங்களிடையே பணமதிப்பு வேறுபாடு, பரிமாற்றப்பொருள், பரிமாற்றத்தில் மாற்றப்பட்ட பொருள், நாணயச் செலாவணித்துறை, நாணயச் செலாவணித்தொழில், இடையீட்டலுவலகம், பங்குக் களப் பணிமனை, தொலைபேசி இணைப்பகம், (வினை) பரிமாறிக்கொள், கொடுத்து வாங்கு, பண்டமாற்றாகக்கொள், பண்டமாற்றாகக் கொடு, நாணயப் பரிவர்த்தனை செய், கைதிகளைப் பரிமாற்றாகக் கொடு, நாணயப் பரிவர்த்தனை செய், கைதிகளைப் பரிமாறிக்கொள், சொற்களைப் பரிமாறிக்கொள், வாதாட்டத்தில் இருபுறமும் கைகலந்துகொள், சச்சரவில் இருபுறமும் இடைகலந்துகொள், இருபுறமும் மாறிமாறிச் செயலாற்று, சரிமாற்றாக நாணயம் பெறு, சரிமாற்றாக வழங்கு, படைக்குப்படை பரிமாற்ற முறையில் மாமறிச்செல்.
Exchangeable
a. பரிமாற்றம் செய்யத்தக்க, பண்ட மாற்றம் செய்யத்தக்க.
Exchequer
n. கருவூலம், நாட்டுரிமை நிதிச்சாலை, நாட்டரசின் வரிவருமான நிதிப்பாதுபாப்புத்துறை, தனிப்பட்டவரின் பொருட்குவை, கைவசமுள்ள நிதி, பிரிட்டனின் பழைய நிதியரங்க முறைமன்றம்.
Excise
-1 n. தீர்வை, உள்நாட்டுப்பொருள்வரி, உள்நாட்டுப் பொருள்வரி அரங்கம், (வினை) தீர்வை கொடுக்கும்படி கட்டாயப்படுத்து, அளவுமீறி வரிசுமத்து.
Excise
-2 v. வெட்டியெடு, நறுக்கு, உறுப்பைத் துண்டித்து விடு, ஏட்டின் பகுதியைப் பிரித்தகற்று.
Exciseman
n. தீர்வையாளர், தீர்வையரங்கக் காவற்பணியாளர்.
Excitable
a..தூண்டிவிடத்தக்க, கிளறிவிடக்கூடிய, எளிதிற் சினங்கொள்கிற, எளிதில் உணர்ச்சி கொள்கிற.
Excitant
n. தூண்டிவிடும்பொருள், ஊக்கும்பொருள், உணர்ச்சி கிளறிவிடுவது, மின்னதிர்வூட்டு பொருள், (பெ.) அவாக் கிளறுகிற, செயல் தூண்டிவிடுகிற, செயல்விரைவு படுத்துகிற, ஊக்குகிற.
Excitation
n. கிளர்ச்சியுறச் செய்தல், கிளர்ச்சியுறச் செய்யும் வகைமுறை, கிளர்ச்சியுற்ற நிலை.