English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Execrate
v. வெறு, அருவருப்புறு, நிந்தி, தெறுமொழி கூறு.
Execration
n. வெறுத்தல், கூறப்பட்ட தெறுமொழி, வெறுக்கப்பட்ட பொருள்.
Execrative
a. சபிக்கிற, பழிக்கிற, பழிப்புச்சார்ந்த.
Executable
a. நிறைவேற்றப்படக்கூடிய, செய்து முடிக்கக்கூடிய.
Executancy
n. இசைக்கலைத்துறை நுட்பம்.
Executant
n. செய்து முடிப்பவர், செயல் வல்லுநர், கலை நுட்பம் தேர்ந்த இசை இயக்குநர்.
Execute
v. செயலாற்று, செய்துமுடி, செயல்முற்றுவி, திட்டத்தை நிறைவேற்று, கையொப்பமிட்டு முத்திரை வைத்துப் பத்திரத்தை முற்றுப்பெறுவி, ஆணையை நடைமுறைப்படுத்து, தீர்ப்பினைக் கொண்டு செலுத்து, சட்டத்தைச் செயற்படுத்து, உடைமை உரிமை மாற்றிக்கொடு, கடமை நிறைவுறுத்து, பணிதீர், இசை இயக்கு, தூக்கிலிடு.
Execution
n. செய்துமுடித்தல், நிறைவேற்றம், செயல்முறை, செயற்பாங்கு, இசை இயக்குதிறம், படைக்கலத்தின் அழிவாற்றல் திறம், செப்ப அழிதிறம், தூக்குத்தண்டனை, உடைமைக் கைப்பற்றீடு, கடன்பட்டவர் கைப்பற்றீடு, வேலைப்பாட்டுத் திறம், கைத்திறம்.
Executioner
n. தூக்கிலிடுபவர்.
Executive
n. சட்டநிறைவேற்ற ஆட்சித்துறை, தீர்ப்பு நிறைவேற்றத்துறை, செயல் நிறைவேற்றத்துறை, செயலாட்சித்துறை, செயலாட்சிக்குழு, நிறைவேற்றக்குழு, செயற்குழு, செயல் ஆட்சித்துறையினர், செயற்குழுவினர், செயலாட்சித் தலைவர், (பெ.) செயலாட்சித்துறை சார்ந்த, நிறைவேற்றத்துறைக்குரிய, ஆட்சியரங்கத்துறை சர்ர்ந்த, செயல் திறமைக்குகந்த, செயல்சார்ந்த, செயலாட்சிததொடர்புடைய, செயல் புரிந்து, செயலாட்சி செய்கிற, நிறைவேற்றுகிற, சட்டத்தைச் செயற்படுத்தும் தகுதியுடைய, சட்ட நிறைவேற்றத் தொடர்புடைய.
Executor
-1 n. நிறைவேற்றுபவர், செய்பவர்.
Executory
-2 n. விருப்ப ஆவணம் நிறைவேற்றப் பத்திர முதல்வரால் அமர்த்தப்படுபவர்.
Executress, n. executor(1), executor(2),
என்பவற்றின் பெண்பால் வடிவங்களுள் ஒன்று.
Executrices, n. pl. executrix
என்பதன் பன்மை.
Exegesis
n. விவிலியத் திரு ஏட்டுவிளக்கம், பொருளுரை விளக்கம் விரிவுரை.
Exegetic, exegetical
a. பொருள் விளக்கம் சார்ந்த, விளக்கங்கூறுகிற.
Exegetics
n. pl. விவிலிய விளக்க ஆய்வுநுல்.
Exegetist
n. விவிலிய ஏட்டு விளக்க ஆய்வாளர்.
Exemparity
n. முன்மாதிரியான நடத்தை.
Exemplar
n. முன்மாதிரி, மேற்காட்டு, பின்பற்றத்தக்கவர், வகைமாதிரிப்படிவம், வகையின் எடுத்துக்காட்டு, மாதிரி உரு, ஒத்திசைபடிவம், சுவடியின் சரிநேர்படி.