English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Feeding-bottle
n. குழந்தையின் பால் புட்டி.
Feed-pipe
n. ஊட்டக்குழாய், இயந்திரத்துக்கு வேண்டுவன கொண்டுசெல்லும் குழாய்.
Feed-pump
n. கொதிகல நீரேற்றி, கொதிகலத்திற்கான நீரை மேலேற்றும் நீர்க்குழாய்.
Feed-tank, feed-trough
n. நீராவி இயந்திரத்திற்குத் தேவையான நீரைச் சேமித்து வைக்கும் தொட்டி.
Fee-faw-fum
n. குழந்தைகளை அச்சுறுத்தும் பொருளற்ற சொல்.
Feel
n. தொட்டறியும் உணர்வு, தொட்டுத் தேர்வு, தொட்டுத்தேர்வுணர்வு, நுண்ணிய உணர்வு, இனமறியாஉள்ளுணர்ச்சி, (வினை) தொட்டுணர், உணர்வுகொள், பட்டுணர், நுகர்ந்தறி, தொட்டுப்பார், தடவிப்பார், தொட்டுத்தேர்ந்து பார், உள்ளத்தில் உணர், உடலுணர்ச்சி கொள், மதவுணர்ச்சி கொள், உள்ளுணர்வுகொள், இனமறியா உள்ளுணர்ச்சிகொள், இன்பதுன்ப நுகர், படு, உணர்வு பெறு, உணர்வுநிலைகொள், நினை, எண்ணு, எண்ணிப்பார், இரங்கு.
Feeler
n. உணரிழை, வழியுணவு தேர்ந்துணர்வதற்குரிய உயிரினங்களின் உறுப்பு, முன்னீடான சோதனை முயற்சி, முன்ணனி வேவுப்படைஞர், எதிராளின் மனநிலை தேர்நத்துணர்தற்காகத் தேர்வு முறையாகக் கூறப்படும்.
Feeling
n. உறுதலுணர்ச்சி, தொட்டறி உணர்ச்சி, உடலுணர்வு, உள்எழுச்சி, எண்ணம், மனஉணர்ச்சி, உள்ளுணர்வான நம்பிக்கை, (பெ.) கூருணர்ச்சியுடைய, நுண்ணுணர்ச்சிதயுடைய, உணர்ச்சியை வௌதக்காட்டுகிற, இரக்க உணர்வுள்ள, உளமார்ந்த.
Feelings
n. pl. உள்ளுணர்ச்சிகள், உண்ளெண்ணங்கள், விருப்புபெறுப்பு அலைகள்.
Fee-sim-ple
n. வரையற்ற மரபுரிமையுடைமை.
Fee-tail
n. மரபுரிமை வரையறைகொண்ட உடைமை, மரபுரிமைத் தொடர்பு அறுந்துவிட்டால் முன்னுரிமையாளருக்கே செல்லும் உடைமை.
Feign
v. பாசாங்கு செய், போலி நடிப்புப்பழகு, மாறாட்டம் செய், இல்லதை இருப்பதாகப் பாவனைப்செய், இட்டுக்கட்டு, புனைந்துரை, தவறான குற்றச்சாட்டு உருவாக்கு, பொய்யாக இணைத்து உண்டுபண்ணு, கள்ளப்பத்திரம் உருவாக்கு, படை.
Feint
-1 n. எதிரியின் கருத்தைத் திருப்புதற்கான போலித் தாக்குதல், ஏய்ப்பு நடவடிக்கை, மாறாட்ட நடைமுறை, போலித்தனம், ஏமாற்று நடிப்பு, பாசாங்குத் தோற்றம், (வினை) போலியாகத் தாக்கு, ஏய்ப்பாக நடி, மாறாட்டம் செய், ஏமாற்று.
Felibrist
n. பிரஞ்சு நாட்டுப் புரோவென்சு மண்டலத்தின் 'பெலிபிரிஜ்' என்ற கவி எழுத்தாளர் குழுவினர்.
Felicific
a. இன்பவாழ்வு நோக்கிய.
Felicitate
v. மகிழ்ச்சி தெரிவி, பாராட்டு.
Felicituous
a. இடவேளைச் சூழல்களுக்குகந்த, இசைத்திறமிக்க, இன்னயம் ஆர்ந்த.
Felicity
n. கழிபேரின்பம், வாழ்நலம், இன்னல ஆக்கம், நல்வாய்ப்புக் கூறு, பாக்கியம், சொல்லாட்சித் தகவு, இசைவு நயம், நயத்திரம்.