English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Felo de se
n. (ல.) தற்கொலை, தற்கொலை செய்து கொள்பவர்.
Felon
-1 n. பெருங்குற்றம் செய்தவன், பாதகன், (பெ.) கொடிய, படுபாதகமான, கொலைத்தன்மை வாய்ந்த.
Felon
-2 n. உகிர்ச்சுற்று.
Felon
-2 n. கடுங்குற்றம் செய்தவர்களின் தொகுதி.
Felonious
a. குற்றத்தண்டனைக்குரிய, தண்டிப்பதற்குரிய குற்றம் சார்ந்த, தண்டிப்பதற்குரிய குற்றத்தை உட்கொண்ட.
Felony
n. பெருங்குற்றம், அடாப்பழி.
Felspar
n. களிமம், பாறையின் பெரும்பான்மைக்கூறு.
Felstone
n. படிகக் கட்டமைப்புப் பெறாத பாறைத்தொகுதிகளில் காணப்படும் செறிவான களிமம்.
Felt
-1 n. ஒட்டுக்கம்பளம், பசை அல்லது தேறல்த மண்டியிட்டு இறுக்கம் பெற்ற அழுத்தக் கம்பளித்துணி (வினை) ஒட்டுக்கம்பளம் ஆக்கு, ஒட்டுக்கம்பளத்தினால் பொதி, ஒட்டுக்கம்பளமாகு, ஒட்டித்திரைவுறு, சடையாகப் பற்று.
Felt, v. feel
என்பதன் இறந்தகால-முடிவெச்சம்.
Felteric
n. குதிரை நோய் வகை.
Felucca
n. துடுப்புக்களையும் பாய்களையும் கொண்டு நடுநிலக்கடலோரம் செல்லும் சிறு மரக்கலவகை.
Female
n. பெண்பால், பெண், பெடை விலங்கு, (பெ.) பெண்பாலுக்குரிய, தாவரங்களில் பயன்தரும் பால்வகைக்குரிய, சூலகத்தையுடைய, கருவிளைவுக் கூற்றினை ஏற்கிற, பெண்பாலலருக்குரிய, குறைந்த ஆற்றல் வாய்ந்த, செறிவு குறைந்த, கருவியின் புறமுனைப்பான பகுதிக்கு ஏற்பிசைவாக உட்குழிவாய் அமைந்துள்ள.
Feme covert
n. (சட்.) மணமான பெண்.
Feme sole
n. (சட்.) மணமாகாத மாது, கைம்பெண், கணவனின் வேறாகச் சட்டப்படி தனிச் சொத்துரிமையுடைய, மணமான பெண்.
Feminality
n. பெண்ணின் இயல்பு, பெண்பாலரின் தனிச் சிறப்புத் தன்மை, சித்திர ஆடை, சிங்காரப்பொருள், சிறுதிறப் பகட்டுப் பொருள்.
Femineity
n. பெட்பு, பெண்மை, ஆண்மையின்மை.
Feminine
n. பெண்பால், பெண்ணியல்பு, பெண்பாற்சொல், (பெ.) பெண்டிருக்குரிய, பெண்ணியல்பான, பெண்களுக்கேயுரிய, பெண்களுக்குகந்த, பெண்பாலருக்கிசைந்த, (இலக்.) பெண்பால் குறித்த, எதுகையில் இரண்டசையுடன் இரண்டாம் அசை அழுத்தமற்றதாயமைந்த, யாப்பு முடிவில் ஈற்றயல் அழுத்தமுடைய, இடைநிறுத்த வகையில் உடனடியாக அழுத்தந் தொடராத.
Femininism
n. பெண்பாலுக்குச் சிறப்பியல்பான சொற்பண்புக்கூறு, பெண்பாலருக்குத் தனி இயல்பான மொழி நடைக்கூறு, பெண்பாலரைப் பின்பற்றிய பாங்கு.
Feminism
n. பெண் உரிமை ஏற்புக்கோட்பாடு, பெண்ணுரிமை ஆதரவு.