English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Feminist
n. பெண் உரிமைகளுக்காகப் பரிந்து பேசுபவர், பெண் இயல்புகளை ஆயும் மாணவர்.
Feminize
v. பெண்தன்மை கொள்ளச்செய், பெண்தன்மை கொள்.
Femme de chambre
n. (பிர.) பெருமாட்டியின் தோழி, பள்ளியறைப்பாங்கி.
Femur
n. துடையெலும்பு, பூச்சிகளின் கால்துடைப்பகுதி.
Fen
n. படுகர், தாழ்ந்த சேற்று நிலம், நீர் செறித்த சதுப்புநிலம்.
Fence
n. வாள்பயில் கலை, வாள் பயிலுதல், வேலி, சுவர், கம்பிவேலி, இயந்திரக் காப்புப்பகுதி, இயந்திர நெறிசெலுத்து கருவி, இயந்திர அளவைக்கருவி, கள்ளச்சரக்குகளைப் பெற்றுக்கொள்பவர், கள்ளச்சரக்குகள் பெற்றுக் கொள்ளப்படுமிடம், (வினை) வாள் ஓச்சும் கலைபயில், நுலியலுக்கிணங்க வாளோச்சு, மறை, கா, அரண், சூழ், அரணமை, குதிரைவகையில் வேவிளைத் தாண்டு, கள்ளச் சரக்குகளில் வாணிகம் செய், இரட்டுற மொழிந்து உண்மையை மறை, பட்டும் படாததுமாக மறு மொழி கூறு.
Fenced
a. வேலியதினால் அடைக்கப்பட்ட.
Fenceless
a. அடைக்கப்படாத, (செய்.) அரணற்ற, காப்பற்ற.
Fencer
n. வாள்சிலம்பம் பயில்பவர்.
Fencible
n. (வர.) உள்நாட்டில்மட்டும் போர்ப்பணி செய்யத் தக்க வீரன், (பெ.) வேலியிடத்தக்க, அரண்அமைக்கத் தக்க.
Fencing
n. காத்தல், சலாகையடைப்பு, சலாகை அணி, வேலியடைப்பு, வேலிகள், அமைப்பதற்கான பொருள், (பெ.) தற்காப்புச் செய்கிற, தடுத்துக்காப்பதற்குரிய.
Fencing-master
n. வாள்சிலம்பக்கலை பயில்விக்கும் ஆசிரியர்.
Fen-cricket
n. அகழ்வண்டு, பிள்ளைப்பூச்சி.
Fend
n. தன்னுதவி, தற்சார்பு, (வினை) தவிர், தட்டி விலக்கு, தடைசெய், தள்ளிவை, வேண்டுவன காத்தமை, தேவைக்கு ஏற்பாடு செய்.
Fender
n. தடைவிலக்கு, தடுப்புக்காப்புப்பொருள், தீத்தாங்கி, கங்கு வௌதவராமல் தடுக்கும் அணைகாப்பு.
Fender-stool
n. தீத்தாங்கிப் பக்கத்திலுள்ள நீண்ட கோக்காலி.
Fenestella
n. திருக்கோயிலில் திருக்கலங்களைக் கழுவின நீர் ஊற்றி வைக்கபடுவதற்குரிய பலிபீடத்துக்குச் சற்றுத்தெற்கிலுள்ள மாடக்குழி.
Fenestrate, fenestrated
a. சிறுசாளரத்தை யொத்த தொளைகளையுடைய.
Fenestration
n. கட்டிடத்தில் சாளரங்களின் ஒழுங்கமைப்பு, (தாவ., வில.) பலகணியொத்த சிறு தொளையுடைய.