English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Fermentation
n. புளித்தல், புளித்தெழும்புதல், பொங்குதல், மனக்கலக்கம், கிளர்ச்சி.
Fermentative
a. நுரைகொள்விக்கிற, புளிப்பேறச்செய்கிற, புளிப்பேறியதனால், உண்டான, புளித்துக்கொண்டிருக்கிற.
Fern
n. சூரல், பெரணி, சிற்றிலைப் படர்செடியினம்.
Fernery
n. சூரல் பாத்தி, பெரணிவகைகளைப் பேணி வளர்க்கும் இடம்.
Fern-owl
n. குருவி வகை, குறுங்காதுடைய ஆந்தை வகை.
Fernshaw
n. சூரல் புதர், பெரணிச் செடிகளின் தூறு.
Ferocious
a. அச்சந்தருகிற, முரட்டுக்குணமுள்ள, கொடிய.
Ferocity
n. முரட்டுக்குணம், இரக்கமற்ற கொடுஞ்செயல்.
Ferox
n. பெரிய ஏரி வரால்மீன் வகை.
Ferrate
n. இரும்புசார்ந்த உப்புவகை.
Ferret
-1 n. முயல்களை வளைகளினின்றும் துரத்திப்பிடிப்பதற்கும் எலிகளைக் கொல்வதற்கும் பழக்கிப் பயன்படுத்தப்படும் மரநாய் வகை, தேடுபவர், துப்பறிபவர், (வினை) மரநாய்வகைகளைக் கொண்டு வேட்டையாடு, துரத்து, வளைகளிருந்துஅகற்று, தந்திரமாகத் கேடு, தேடிப்பிடி, கிளறித்தேடு, மறைவ
Ferret
-2 n. தடித்த இழைக்கச்சை.
Ferrety
a. மரநாய் வகை போன்ற.
Ferriage
n. ஓடத்தில் ஏற்றிச்செல்லுதல், ஓடக்கூலி.
Ferric
a. இரும்புசார்ந்த, மூவிணை இரும்பு அடங்கிய.
Ferriferous
a. இரும்புபடுகிற, இரும்பு அடங்கிய, இரும்பு வமிளைவிக்கிற.
Ferrious
a. இரும்புக்குரிய, இரும்பு அடங்கிய.
Ferris wheel
n. பொருட்காட்சிகள் முதலியவற்றில் மக்கள் கருத்தைக் கவரும் வகையில் தன் சுற்றுவட்டவரையில் மக்கள் அமர்வதற்கான இருக்கைகளைத் தாங்கிக் கொண்டு செங்குத்தாகச் சுழலும் மாபெரும் சக்கரம்.
Ferro-concrete
n. எஃகு உட்காப்புக்கொண்ட திண்காரை.
Ferro-magnetic
a. நேர்காந்தத் திறம் கொண்ட, நேர்காந்த ஆற்றல் சார்ந்த.