English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Ferro-print
n. இரும்பக உப்பு வகைகளைக்கொண்டு எடுக்கப்படும் நிழற்படம்.
Ferrotype
n. மெல்லிய இரும்புத்தகட்டின் மீது நேர்படியாக எடுக்கப்படும் முற்கால நிழற்பட முறை.
Ferrous
a. ஈரிணைதிற இரும்பு கொண்ட, இரும்பு அடங்கிய.
Ferrugineous, ferruginous
a. இரும்பின் துருச்சார்ந்த, இரும்பின் துருக்கலந்த, இரும்புக் கலவை சார்ந்த, துருஇரும்பின் நிறமான, செம்பழுப்பு நிறமான.
Ferrule
n. பிரம்புகளின் உலோகப்பூண், குழாய் முகப்புப்பூண், இணைப்புச்சுரை.
Ferry
n. தோணித்துறை, படகுப் பயணப்பாதை, பயணப்படகு, படகுப்பயணக்கூலி, படகேற்றிச்சென்று சுங்கம் பிரிக்கும் உரிமை, (வினை) தோணியிலேற்றிச்செல், தோணியில் கடத்து, தோணிசெலுத்து, படகு வகையில் நீர் வழியில் போக்குவரத்துச்செய், தொழிற்சாலையிலிருந்து வானவூர்தியை அதன் ஆற்றலையே பயன்படுத்தி வாணிக வினைக்களத்துக்குப் பறக்கவிட்டனுப்பு.
Ferry-bridge
n. புகைவண்டித் தொடர் கரையிலிருந்து கரைக்குக் கடந்து செல்ல இடையே பாலம் போல நின்றுதவும் நீண்ட படகு.
Ferry-house
n. ஓடக்காரனது வீடு, ஓடத்துறையில் தங்குமிடம், ஒடத்துறைச் சிற்றுண்டிச்சாலை.
Ferryman
n. பயணப் படகோட்டி.
Ferrypilot
n. தொழிற்சாலையிலிருந்து வான ஊர்தியை வாணிக வினைக்களத்துக்குப் பறக்கவிட்டுச் செல்லும் விமான மோட்டி.
Fertile
a. செழிப்பான, வளமான, நிறனையுடைய, இனப்பெருக்கமிக்க, செயல்வகைமுறைகளில் நிறைதிறமுடைய, புதுப்புனைவு வளமிக்க.
Fertility
n. செழுமை, வளப்பம், நிறைவு, வளச்செறிவு, பொலிவு, கருவளம்.
Fertilization
n. கருவுறல், கருக்கொள்ளச் செய்தல், சினைப்படுத்தும் முறை, உரமூட்டல், உரவளம்.
Fertilize
v. வளப்படுத்து, செழிப்பாக்கு, உரமூட்டு, சினைப்படுத்து, பொலிவி, (தாவ.) மகரந்தக் கலப்பு ஏற்படச்செய்.
Fertilizer
n. கருக்கொள்ளச் செய்பவர், சினைப்படுத்தும் பொருள், நல்வள உரம், எரு.
Ferula
-1 n. (தாவ.) குடைப்பூக்கொத்துச் செடிவகை.
Ferula
-2 n. ஒறுத்தற்கான கழி, பிரம்பு, ஆணைக்கோல்.
Ferule
n. ஒறுத்தற்கான பிரம்பு அல்லது கழி, (வினை) கோல் கொண்டு அடி, அடித்து ஒறு.
Fervency
n. வெப்பம், ஆவல், ஆர்வம், உணர்ச்சி மிகுதியால் எழும் அன்பு, மிகு உணர்ச்சி, விதிர்விதிர்ப்பு.
Fervent
a. வெப்பமான, சுடர் விட்டு ஔதர்கிற, தணியாப்பற்றுள்ள, ஆர்வமிகுந்த, செறிவார்ந்த.