English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Food
n. உணவு, விலங்கின் தீனி, இரை, செடியினத்துக்குரிய உணவுச்சத்து, உணவுப்பொருள், ஊட்டம், உணவுக்குவை, உண்ணத்தக்க பொருள், உணவு வகை, வளர்ச்சிக்கு உணவுங் கூறு, ஆதாரம், மூலப்பொருள்.
Food-stuff
n. உணவுப் பண்டம்.
Fool
-1 n. அறிவிலி, பேதை, முட்டாள், திறமையற்றவர், அப்பாவி, வௌளையுள்ளத்தவர், ஏமாளி, கோமாளி, விகடன், பட்டிக்காட்டான், (வினை) ஏமாற்று, வீணாகச் செலவழி, காலத்தை வீணாக்கு, பொறுப்பற்று நட, சிறு பின்ளைத்தனமாகச் செயலாற்று.
Fool
-2 n. சுண்டி வேக வைக்கப்பட்ட பாலேடு கலந்த பழச்சாறு.
Foolery
n. மதிகேடு, மடத்தனம்,. மடமைச் செயல், ஏமாற்று.
Foolhardy
a. மடத்துணிவுடைய, தறுதலையான.
Foolproof
a. எவரும் தவறாகப் புரிந்துகொள்ள முடியாத படி மிகவும் தௌதவாகவுள்ள, எவ்வளவு கவனக்குறைவினாலும் சேதமுற முடியாத படி மிகவும் உறுதிவாய்ந்த.
Foolscap
-2 n. எழுதுவதற்கும் அச்சிடுவதற்கும் பயன்படும் தாள் அளவு 1ஹ்க்கு13 1க்ஷீ2 முற்காலத் தாளின் நீர்க்குறி.
Fools-cap
-1 n. கோமாளியின் குல்லாய், தாள் கூம்புதொப்பி.
Foot
n. காலடி, பாதம், விலங்கின் கால், ஊர்வனவற்றின் இயங்கு உறுப்பு, தட்டுமுட்டுப் பொருள்களின் ஆதாரக்கம்பம், காலடி எடுத்துவைக்கும் தொலை, நடைப்பாணி, நடைவேகம், அடிப்பகுதி, முனைப்பான கீழ்ப்பகுதி, கட்டிலடி, செய்யுளடியின் சீர், அடி, பன்னிரண்டு அங்குல நீளமுள்ள நீட்டலளவைக் கூறு, (தாவ.) இழிணைக்கும் உறுப்பு அல்லது பகுதி, மலையடிவாரம், குன்று அடிப்புறம், ஏணியின் கீழ்ப்படி, சுவரடி, பட்டியல் இறுதிப்பகுதி, பக்கக் கீழ்ப்பகுதி, வகுப்பின் இறுதிக் கூறு, வண்டல், மண்டி, எண்ணெய்க்கசடு, வண்டல் சர்க்கரை, (வினை) நடனமாடு, கால் அடியெடுத்துவை, நட, காலுறைக்குப் புதிய அடிப்பகுதி இடு, தொகை கூட்டு, தொகை ஏறு, விலைப்பட்டியலுக்குப் பணம் கொடுத்துத்தீர்.
Footage
n. அடியளவு, அடிக்கணக்கான அளவு, அடிக்கணக்குக் கட்டண வீதம்.
Foot-and-mouth disease
n. கோமாரி, கால்நடைகளுக்கு வரும் நோய் வகை.
Football
n. உதை பந்து, காற்பந்தாட்டம்.
Footballer, footballist
n. காற்பந்தாட்டத்தார்.
Foot-bar
n. தாள்பதி கட்டை.
Footbath
n. கால் கழுவுதல், கால் கழுவுதற்கான கலம்.
Footboard
n. உந்து வண்டியின் படிக்கட்டை, வலவன் காற்கட்டை, வண்டியின் படிப்பலகை.
Foot-bridge
n. நடைப்பாலம்.
Foot-drill
n. காலால் இயக்கப்படும் துறப்பணம்.