English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Forestall
v. முன்னதாகச் செயலாற்று, முந்துற ஏற்பாடு செய், முன்னுணர்ந்து தடு, உரிய காலத்துக்கு முன்னரே செய்து முடி, (வர.) உயர்விலைக்கால ஆதாயம் நாடிச் சரக்குகளை வாங்கிவைத்துச் சேமி.
Forestay
n. முன்தலைப்பு வடம், பாய்மரத்தின் முற்பகுதியைத் தாங்குதற்காகத் தலைப்பிலிருந்து அடிவரை செல்லும் பாய்மரக் கயிறு.
Forester
n. காடு பாதுகாவலர், வளர் மரங்களைக் கவனிப்பவர், காடு வாழ்நர் சங்கம் என்ற முற்கால நிறுவன உறுப்பினர், காட்டில் வாழ்பவர், காட்டில் வாழ்வது, இங்கிலாந்திலுள்ள மட்டக்குதிரை, விட்டில் வகை.
Forestry
n. காடுகளின் தொகுதி, காட்டு நிலம், மரங்களுள்ள பரப்பு, காட்டியல், காடு வளர்க்கும் கலை.
Forest-tree
n. காட்டிற்கேற்ற பெரு வளர்ச்சியுள்ள மரம்.
Foretaste
-1 n. முன்னுகர்வு, முன்னனுபவம்.
Foretaste
-2 v. முன்பே சுவைத்துப்பார், முன்கூட்டி நுகர்ந்துணர், நுகர்வை எதிர்நோக்கி மகிழ்.
Foretell
v. வருவதுரை, முன்னறிந்து கூறு, முன்னறிவி, முன்னறிகுறி, காட்டு, முன்னோடியாயிரு, முன்னோடு தூதராயமை.
Forethought
n. முன்னறிவு, முன்னெண்ணம், முன்னாய்வு, முன்னேற்பாட்டுக்குரிய அக்கறை, சேமநலக் கவனம்.
Foretime
n. கடந்த காலம், முந்தைய நாட்கள், பண்டைக் காலம்.
Foretoken
-1 n. முன்குறிப்பு, முன்னறிகுறி, முன் அடையாளம்.
Foretoken
-2 n. முன் குறிப்பிடு, முன்னறிகுறி காட்டு.
Foretop
n. முன் பாய்மர உச்சி, முன் பாய்மர உச்சியிலுள்ள மேடை.
Fore-top-gallant mast
n. பாய்மர உச்சியின்மேலுள்ள பாய்மரம்.
Fore-topgallant-sail
n. கப்பல் பாய்மரத்தின் உச்சியிலுள்ள பாய்.
Fore-top-mast
n. முன்னணிப் பாய்மரத் தலைப்பிற் பொருந்தப்பட்ட பாய்மரம்..
Foretopsail
n. கப்பலில் முன் பாய்மரத்தின் முக்கிய பாய்க்கு மேலுள்ள பாய்.
Foretype
n. வரப்போகும் பொருளின் முன் உருமாதிரி.
Forever
adv. என்றென்றைக்கும், எல்லாக் காலத்துக்கம்.
Forever-more
adv. இனிமேல் எப்போதும்.