English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Fuchsia
n. நீண்டு தொங்கும் மலர்கள் கொண்ட புதர்ச்செடி வகை.
Fuchsine
n. ஆழ்ந்த சிவப்புச்சாயமாகும் உப்பு வகை.
Fucoid
a. கடற்பாசி வகை சார்ந்த, கடற்பாசி போன்ற, (மண்.) பாறைகள் வகையில் கடற்பாசித்தடம் உடைய.
Fuddle
n. குடிமயக்கம், போதை, குழப்பம், (வினை) அடிக்கடி குடி, வெறிக்கச்செய், குழப்பு, உணர்வு மழுங்கச்செய்.
Fuddler
n. மிடாக்குடியன்.
Fudge
-1 n. பொருளற்ற செய்தி, மடத்தனம், பத்திரிகையில் கடைசிநேரம் புகுத்தப்பட்ட செய்தி, கடைசி நேரம் புகுத்துவதற்காக விடப்பட்ட இடம், பால் சர்க்கரை கலந்த மென்மை யான இனிப்புத் திண்பண்ட வகை.
Fudge
-2 n. ஒட்டவைத்த பகுதி, (வினை) இணைத்துப்பொருத்து, ஒட்டுப்போட்டுச் சீர்ப்படுத்து, நேர்மையற்ற வழியில் உருவாக்கு, நேர்மையற்ற முறைகளைக் கையாளு.
Fuehrer
n. (செர்.) தலைவர், முதல்வர்.
Fuel
n. விறகு, எரிபொருள், உணர்ச்சிக்கு ஈடுசெலுத்தும் பொருள், உணர்ச்சியைப் பெருக்கும் பொருள், (வினை) தீக்கு எரிபொருள் இடு, எரிபொருள் பெறு.
Fug
n. புழுக்கம், மூலைமுடுக்கில் பொதிந்துள்ள தூசி, (வினை) புழுக்கமான சூழ்நிலையை இனிதாக நுகர்.
Fugacious
a. நிலையற்ற, விரைந்தேடுகிற, எளிதில் மறைகிற, கைக்கொள்ளுதற்கரிய, எளிதில் கிடைத்தற்கு இயலாத.
Fugal
a. பலவோசை உருப்படி சார்ந்த.
Fugitive
n. நாடு கடத்தப்பட்டவர், நாடோ டி, அகதி, நாடு விட்டு நாட்டில் அடைக்கலம் புகுபவர், தப்பியோடியவர், ஆள்வோர் காப்பிலிருந்தே தண்டனையிருந்தோ பகைமையிருந்தோ இடரிலிருந்தோ தப்பி ஔதந்தோடித் திரிபவர், (பெ.) தப்பி ஓடுகிற, பிழைத்தோடி வந்த, ஒடிவிட்ட, கணந்தோறும் மாறுகிற, நிலையற்ற, கணநின்று மறைகிற, வரைந்து பட்டுப்போகிற, இலக்கியவகையில் நிலையுடைப்பயனற்ற, கணநிலைச்சுவையுடைய.
Fugle
v. படைத்துறைப்பயிற்சி முன்மாதிரி இயக்குநராகச் செயலாற்று.
Fugleman
n. பயிற்சி இயக்குநர், படைப்பிரிவின் பயிற்சிகளின் பொது இயக்க முன்மாரிரியாக முன்நின்று இயக்குபவர், இயக்குநர், முதல்வர், கருத்துரைப் பேராளர், அமைப்பாளர்.
Fugue
n. பலவோசை உருப்படி, இடமாற்றத்துடன் ஏற்படும் நினைவிழப்பு, (வினை) பலவோசைப்பாடல் இயற்று அல்லது பாடு.
Fulcra
n. (தாவ.) துணையுறுப்புக்கள், தளிரிழைகள் புடைச்செதிள்கள் போன்ற துணைவளர்ச்சிகள்.
Fulcrum
n. மிண்டு, தாங்குநிலை, ஆதாரம், (இய.) மிண்டிப்பட்டடை, நெம்புகோலின் இயக்க ஆதாரம், செல்வாக்குக் குரிய ஊடுதுணை, ஆற்றல் இயக்கும் உறுதுணைவர்.
Fulfil
v. நிறைவேற்று, நிறைபுபடுத்து, தீர்வுசெய், தீர்த்துவை, செய்துமுடி, செயற்படுத்து, விதிகள் கட்டுப்பாடுகள் வகையில் முற்றிலும் இசைவுறச்செயலாற்று, முடிவுக்குக் கொண்டு வா, நிறைவு செய்.