English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Germanesque
a. செர்மானியச் சிறப்புப் பண்புகள் கொண்ட.
Germanic
n. செர்மானிய இனத்தவரின் பொது மூல மொழி, (பெ.) செர்மானிய இனம் சார்ந்த, செர்மானிய இனத்தவரின் முழுமொத்தப் பரப்புடைய, செர்மானிய இனத்தவரின் மொழி சார்ந்த, செர்மன் நாட்டுமக்கள் சார்ந்த.
Germanish
a. ஓரளவு செர்மானிய பண்புடைய.
Germanism
n. செர்மானிய மொழிமரபு, செர்மானிய கருத்துக்கள், செர்மானிய முறைகள்.
Germanist
n. செர்மானிய மொழி நுல் அறிஞர், செர்மனியைப் பற்றிய செய்திகளில் அறிஞர்.
Germanistic
a. செர்மானிய மொழிக்கல்வியைச் சார்ந்த.
Germanity
n. செர்மானிய தனி இயல்பு, செர்மானிய தனிச்சிற்ப்புப் பண்புக் கூறுகளின் தொகுதி.
Germanium
n. எளிதில் முறிவுறும் வெண்ணிற உலோகத்தனிமம்.
Germanize
v. செர்மானியராகு, செர்மானியராக்கு, செர்மானிய பாங்குகளைப் பின்பற்று.
Germanophil
n. செர்மன் ஆர்வலர்.
Germanophobe
n. செர்மன் வெறுப்பாளர்.
Germ-cell
n. கருநிலை உயிர்மம், இனமரபுத்தொடர்ச்சியை முன்னிட்டு உடலின் பிற உயிர்மங்களிலிருந்து தனிப்படுத்திப் பட்டு மறுபாலுயிர்மத்துடன் கலக்கும் வரை முதிராநிலையில் வைக்கப்பட்டிருக்கும் உயிர்மம், கருஉயிர்மம், கருவின் உயிரணுக்கூறு.
Germen
n. கருமூல விதை, விதையின் கருவடிவம், கருவகம், மலரின் பெண்ணுறுப்பு, தண்டுமுளை.
Germicide
n. நுண்மக் கொல்லி, நோய் நுண்மமழிக்கும் மருந்து.
Germinal
a. முதிரா உயிர்மம் சார்ந்த, முதிரா உறுப்பின் செயற்படாத் தொடர்ச்சின்னம் சார்ந்த, முதிரா நிலையில் உள்ள, கருவிதை நிலையில் உள்ள, முளைபற்றியய, கருவினுக்குரிய, வளர்ச்சித் தொடக்கப்டியில் உள்ள, கருவிலேயே உள்ள.
Germinant
a. அரும்புகிற, துளிர்க்கிற, முளைவிடுகிற, வளாச்சித் தொடக்கநிலையில் இருக்கிற.
Germinate
v. முளைவிடு, அரும்பு, தளிர், துளிர்க்கச்செய், வளரத் தொடங்கு, புதிது வளரச்செய், உண்டுபண்ணு.
Germ-layer
n. கருவின் மூல அடுக்குகளில் ஒன்று.
Germon
n. நீண்ட துடுப்புக்கள் கொண்ட பெருங்கடல் உணவு மீன் வகை.
Germ-plasm
n. ஊன்மத்தில் மரபுவழிக்கூறுகளைத் தொடர்ச்சியாகத் தாங்கி நிற்கம் மூலப்பொருள்.