English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Grand-uncle
n. பாட்டனார் அல்லது பாட்டியார் உடன் பிறந்தார்.
Grange
n. பண்ணைமனை, குதிரைக்கொட்டில் முதலிய கட்டிடங்களடங்கிய வளைவு, கம்பத்தம், நாட்டுக்புற மனை, படைத்துறையில் கூலக்களஞ்சியம்.
Granger
n. பண்ணைக்காவலர்.
Grangerism
n. கழிமிகைப் படவிளக்கம், வேறு பல நுல்களிலிருந்து விளக்கப்படங்களையும் தலைப்புப் பக்கங்களையும் வெட்டியெடுத்து உடன் வழங்கும் முறை.
Grangerize
n. கழிமிகைப் படவிளக்கம் அளி, வேறு பல நுல்களிலிருந்து விளக்கப் படங்களையும் தலைப்புப்பக்கங்களையும் வெட்டியெடுத்து மற்ற விளக்கங்களுடன் கலந்து வழங்கு.
Graniferous
a. கூலவகை விளைவிக்கிற, தானியம் போன்ற விகையை வழங்குகிற.
Granite
n. கருங்கல், கட்டிடத்துக்குப் பயன்படுத்தப்படும் திண்பாறை வகை, (பெ.) கருங்கல்லாலான, கருங்கல் போன்று கடினமான.
Granites
கருங்கற்கள், கிரானைட் கற்கள்
Granite-ware
n. கருங்கல் போன்ற தோற்றத்தோடு கூடிய புள்ளிகளுள்ள மட்கலம், மெருகிடப்பட்ட இரும்புக்கல வகை.
Granitic
a. கருங்கல் சார்ந்த, கருங்கல்லாலான, கருங்கல் போன்ற.
Granitite
n. அப்பிரகக் கருங்கல், வௌளை அப்பிரகம் கலந்த கருங்கல் வகை.
Granitoid
a. கருங்கல் வடிவம் போன்ற, கருங்கல் தோற்றமுள்ள.
Granivourus
a. கூலம் தின்கிற, தானிய விதைகள் தின்கிற.
Grannom
n. நீர் ஈ வகை, மீன் பிடிப்பதற்கு ஈப் போன்று பயன்படுத்தப்படும் போலிப் பொருள்.
Granodiorite
n. கருங்கல் போன்ற படிகக் கல்லுள்ள பாறை.
Granolthic
a. சீமைத்காரை சார்ந்த, சிமிட்டியும் கருங்கல் துண்டுகளும் கொண்ட.
Grant
n. கொடை, கொடை, வழங்கீடு, நன்கொடை, கொடைப்பொருள், மானியத்தொகை, அரசின் பொருளுதவி, கொடைப்பத்திரம், பட்டயம், செலவுப்படி, வாழ்கைப்படி, பத்திரத்தின்மூலம் சொத்துரிமையைக் கொடுத்தல், சட்டப்படியான உரிமை மாற்றம், (வினை) அளி, கொடு, வழங்கு, மெய்யென ஒப்புக்கொள், விட்டுக்கொடு, இசைவு கொடு, சலுகையளி.
Granted
a. கொடுக்கப்பட்ட, வழங்கப்பட்ட, இசைவளிக்கப்பட்ட, ஒத்துக்கொள்ளப்பட்ட.
Grantee
n. கொடையளிக்கப்பட்டவர், (சட்) பட்டய உரிமையாளர்.