English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Gravy
n. இறைச்சி வடிநீர், சமைக்கும் முன்னும் பின்னும் இறைச்சியிலிருந்து கசியுஞ் சாறு, வடிசாறு, கறி வகைகளில் கலக்கப்படும் வடிநீர்க்கலவை.
Gravy-boat
n. வடிசாறு சமைப்பதற்கான படகுருவைக் கலம்.
Gravy-soup
n. வடிநீர்ச்சாறு, இறைச்சி வடிநீர் போன்ற வடிசாறு.
Grayling
n. வெண்ணிறங்கலந்த சாம்பல் வண்ண மீன்வகை, பழுப்பு நிறமான சிறகடி வாய்ந்துள்ள வண்ணத்துப் பூச்சி வகை.
Graze
-1 n. மேலீடான உராய்வு, தோலுராய்வு, (பெ.) மெல்ல உராய்ந்துசெல், தடவலாகச் செல், தோலுராயவிடு, மேற்பரப்பு உராய்வுறு.
Graze
-2 v. புல்மேய, புல்மேய விடு, புல்லுணவளி, புல்லைத்தருவித்து வழங்கு, புல்தின், மேய்ச்சலுக்கு இட்டுச்சென்று பேணு, மேய்த்துக் காப்பாற்று.
Grazier
n. சந்தையில் விற்பதற்காக ஆடுமாடுகளை மேய்த்து வளர்ப்பவர்.
Grazing
n. மேய்ச்சல், புல்தின்னல், மேய்தல், மேய்த்துப் பேணல், மேய்த்துக் கால்நடை வளர்த்துப் பெருக்குதல்.
Grease
-1 n. கொழுப்பு, பசையுள்ள, எண்ணெய்ப்பொருள், மான் கொழுப்பு, வேட்டை விலங்குகளின் கொழுப்பு, இறந்த விலங்குகளின் உருக்கியெடுக்கப்பட்ட கொழுப்பு, மசகெண்ணெயாகப் பயன்படும் பொருள், தூய்மைப்படுத்தப்படாத கம்பளியிலுள்ள எண்ணெய்ப் பசைப்பொருள், குதிரைக் குளம்புகளிலுள்ள நோ
Grease
-2 v. கொழுப்புப் பூசு, எண்ணெய் பூசு, எண்ணெய்க் கறையாக்கு, கொழுப்பினால் மாசுபடுத்து, மசகிடு, குதிரைக்குக் குளம்புநோய் வருவி.
Grease-box
n. மசகிடுவதற்காகப் புகைவண்டிச் சக்கரத்தில் பொருத்தப்பட்டுள்ள பெட்டி.
Grease-heels
n. குதிரைக் குளம்புகளில் வரும்நோய்வகை.
Grease-paint
n. நடிகர்களின் முகத்தை அழகுபடுத்தப் பயன்படும் பொழுப்புக் கலந்த முகப்பூச்சு.
Grease-proof
a. கொழுப்பு புகமுடியாத, மசகெண்ணெய் நுழையவிடாமல் தடுக்கிற.
Greaser
n. மசகெண்ணெய் பூசுபவர், எரியோம்பு பணியாளர்களின் முதல்வர்.
Grease-trap
n. வடிகால் பசைப்பொருளைத் தடுத்துப் பிடிக்கும் அமைவு.
Greasewood
n. எண்ணெய்ப்பசைவுள்ள அமெரிக்க புதர்ச் செடிவகை.
Greasy
a. கொப்புப்போன்ற, மிகு கொழுப்பார்ந்த, எண்ணெய்ப் பசையுடைய, வழவழப்பான, பிசுக்குள்ள, வழுக்குகிற, சேற்றுக்களியார்ந்த, நனைவுற்ற, கம்பளி வகையில் துப்புரவாக்கப்படாத, குதிரை வகையில் காலழற்சி வீக்கங் கண்டுள்ள, வெறுப்பூட்டும் மட்டுமீறிய இன்னய நடைவாய்ந்த, பசப்பு நடையுடைய, கீழ்த்தரச் சிற்றின்ப உணர்ச்சியுடைய, கீழ்த்தர உணர்ச்சி சார்ந்த.