English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Great Dane
குறுமயிருள்ள ஆற்றல் மிக்க பெரிய நாய் வகை,
Great-aunt
n. பாட்டனார் அல்லது பாட்டியாரின் உடன் பிறந்தாள்.
Great-circle
a. நிலவுலகக் கோளப் பெருவட்டம் சார்ந்த, நிலவுலகக் கோள மையமே மையமாகக் கொண்ட நிலவுலகக் கோளத்தின் மேற்பரப்பிலுள்ள வட்டம் சார்ந்த, நிலவுலகக் கோளப் பெருவட்டம் வழிச் செல்கிற.
Greatcoat
n. பறமேற்சட்டை.
Greaten
v. பெரிதாக்கு, மிகப் பெரிதாக்கு, பெரிதாகு, மேன்மையாகு.
Great-grandchild
n. பேரனின் அல்லது பேர்த்தியின் பிள்ளை, கொள்ளுப்பெயரன், கொள்ளுப்பெயர்த்தி.
Great-hearted
a. பரந்த மனப்பான்மையுள்ள, பெருந்தன்மையுள்ள, மேதக்க, அஞ்சாத.
Greatly
adv. மிகுதியாக, மிகு அளவில், நிரம்ப, பெருந்தன்மையாக.
Great-nephew
n. உடன் பிறந்தாரின் பேரன்.
Greatness
n. பெருமை, மேன்மை.
Great-niece
n. உடற்பிற்ந்தாரின் பேர்த்தி.
Greats
n. pl. ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் பண்டை உயர்தர இலக்கியம் அல்லது தற்கால மெய்யறிவுத் துறையில் முடிவான தேர்வுச் சிறப்பு.
Greaves(1), pl.
முழங்காலுக்குக் கீழுள்ள காலின் போர்க்கவசம், முழந்தாள் முன்புறக் காப்புத்தகடுகள்.
Greaves(2), n,pl.
தூண்டில் இரையும் நாய் உணவும் ஆழூம் உருக்கப்பட்ட மெழுகின் வண்டற்பொருள்.
Grebe
n. வாலில்லாத் தோற்றமுடைய நீர்முழ்கு பறவை வகை, ஒப்பனைப் பொருளாகப் பயன்படும் நீர்முழ்கு பறவை வகையின் இறகு.
Grecian
n. கிரேக்க நாட்டினர், கிரேக்க மொழி இலக்கிய அறிஞர், கிரேகக மொழி இலக்கிய மாணவர், கிறைஸ்ட்ஸ் ஹாஸ்பிட்டல் நிலையத்து ஒற்றுயர்படி மாணவர், கிரேக்க மரபில் பயின்றீடுபட்ட யூதர், (பெ.) கிரேக்க நாடு அல்லது மொழி சேர்ந்த, கிரேக்க சிற்பக்கலை சார்ந்த, கிரேக்க முகவெட்டுடைய, கிரேக்க மரபு பின்பற்றிய, கிரேக்க பாணி பின்பற்றுகிற.
Greedy
a. பேராவலுள்ள, தணியாப் பேராசையுடைய, பெருந்தீனி தின்கிற, மிகுந்த பசியுல்ன் உண்கிற, பெரும் பொருளவாவுள்ள, கொடுங்கொள்ளையிடுகிற, ஆர்வமிகுந்த, முனைப்பான விருப்பமுள்ள.
Greek
n. கிரீஸ் நாட்டவர், கிரேக்க இனத்தவர், கிரேக்க குடியேற்றப் பகுதிக்குரியவர், கிரேக்க மரபீடுடைய யூதர், கிரேக்கத் திருக்கோயில் உறுப்பினர், கிரேக்கமொழி, விளங்காமொழி, விளங்காச்செயதி, சூழ்ச்சித்திறமையுள்ளவர், எத்தர் மோசடி செய்பவர், களிமப்ன், கோமாளி, (பெ.) கிரீஸ்நாடு சார்ந்த, கிரேக்க இனத்துக்குரிய, கிரேக்க மக்களுக்குரிய, கிரேக்க மொழியைச் சேர்ந்த.
Greekdom
n. கிரேக்க உலகம், கிரேக்க சமுதாயம்.