English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Grenadine
-3 n. மாதுளம் பழச்சாறு கலந்த தேம்பாகு.
Gressorial
a. (வில.) நடக்கிற, நடப்பதற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்ட.
Grew, v. grow
என்பதன் இறந்தகாலம்.
Grey
n. சாம்பல்நிறம், கதிரவனிடமிருந்து நேரடியாக வராத குளிரொளி, சாம்பல் வண்ணமூட்டும் பொருள், சாம்பல் வண்ண ஆடை, சாம்பல்நிறக் குதிரை, (பெ.) சாம்பல் நிறமான, கருமைக்கும் வெண்மைக்கும் இடைப்பட்ட நிறமுடைய, அரையிருளான, ஔத இருள் கலந்த நிலையிலுள்ள, ஔத மயங்குகிற, மந்தாரமான, முகில்மூடாக்கான, சோர்வான, மகிழ்ச்சியற்ற, நரைத்த, நரைக்குரிய, மூப்பினால் முடி நரைத்த, மூப்புச் சார்ந்த, பழமைப்பட்ட, பண்டைய, தொல்பழங் காலத்திய, நினைவுக்கு எட்டாத, பட்டறிவுடைய, அனுபவம் வாய்ந்த, (வினை) சாம்பல் நிறமாக்கு, சாம்பல் நிறமாகு, நரை, ஔத மங்கவை, ஔத மயங்குவி, நிழற்படத்துறையில் கண்ணாடியின் மேற்பரப்பை மங்கலாக்கு, மறிபடிவத்தின் மீது மங்கலாக்கப்பட்ட கண்ணாடியிட்டு நிழற்படத்துக்கு அரைச் செயற்படிவத் தோற்றம் அளி.
Greybeard
n. முதியவர், கிழவர், நரைத்த கிழவர், இன்தேறல் சாடி பாசி வகை.
Grey-coat
n. இங்கிலாந்தில் கம்பர்லாந்து மாவட்டத்தைச் சார்ந்த குடியானவர்.
Grey-drake
n. ஒரே நாள் வாழும் உயிரின வகை.
Greygoose
n. காட்டு வாத்துவகை.
Greyheaded
a. வயது முதிர்ந்த, நீண்ட நாள் பணியாற்றிய, தொல் பழமையான, பழமையப்பட்ட, காலங்கடந்த.
Grey-hen
n. இறகுடைய கால்கள் கொண்ட பெட்டைக்கோழி வகை.
Greyhound
n. நீண்ட மெல்லிய கால்களும் கூரிய பார்யும் விரைவோட்டமுடைய முயல் வேட்டைநாய் வகை.
Greyhound-racing
n. பணயம் வைத்து விளையாடுவதற்காகச் செயற்கை இயந்திர முயலை வேட்டைநாய் பிடிப்பதற்கான விளையாட்டு வகை.
Greyish
a. சிறிதே சாம்பல் நிறமான.
Greylag
n. காட்டுவாத்து வகை.
Greystone
n. எரிமலைப் பாறைவகை.
Greywacke
n. உருண்டையான கூழாங்கற்களும் மணலும் சேர்ந்த உருவான கலவைப் பாறைவகை.
Greywether
n. மேயும் ஆட்டுத் தோற்றமளிக்கும் பாறை வகை.
Grid
n. கம்பி அழிச்சட்டம், சமையற் கம்பி வலைச்சட்டம், மின்துறையில் கம்பி வலை, மின் ஆற்றல் நிலைய இணைப்பு வரைச்சட்டம், நிலப்படக் குறுக்குக் கோட்டுச்சட்டம், இருப்பூர்திக் கம்பி அமைவு.
Griddle
n. அப்பம் சுடும் இருப்புக்கல், சுரங்கத் துறையில் இரும்பு வலைத்தட்டி, (வினை) சுரங்கத் துறையில் இரும்பு வலைத்தட்டியால் மறை.