English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Grimalkin
n. கிழப் பெண்பூனை, வெறுக்கத்தக்க பொறாமைக்காரக் கிழவி.
Grime
n. புகைபிடித்த கறை, கரிபற்றிய அழுக்கு, தூசு படிந்த மாசு, (வினை) கருமையாக்கு, அழுக்காக்கு, அழுக்கடை.
Grimms law
n. மூல இந்தோ-செர்மானிய வல்லெழுத்துக்கள் செர்மானிய மொழியில் அடைந்த ஒலிமாற்றம் பற்றிய ஜேக்கப் கிரிம் என்பவர் கண்டு வகுத்த விதி முறை.
Grin
n. இனிப்பு, பல்லைக்காட்டுதல், அசட்டுச்சரிப்பு, (வினை) பல் இளி, அசட்டுச்சிரிப்பு சிரி, வெறுப்புக்காரணமாகப் பல்லைக்காட்டு, இறுமாந்து பல்லை இளித்துக்காட்டு, பல்லைக்கடித்துக்கொண்டு பொறுத்துக்கொள்.
Grind
n. அரைப்பு, தேய்ப்பு, அரைப்பொலி, கிறீச்சொலி கிறீச்சொலியினால் ஏற்படும் நரம்பு அதிர்ச்சி, கடுஉழைப்பு, சோர்வூட்டும் இடைவிடா உழைப்பு, முசிவுணர்ச்சி, தேர்வுக்கான கடுமையான படிப்பு, உடற்பயிற்ச்சிக்கான கடுநடை, கடுவழிக் குதிரைப்பந்தய ஒட்டம், படகில் ஆறு கடத்தல், (வினை) அரை, நொறுக்கு, ஒன்றுடனொன்று தேய், அரைத்துமாவாக்கு, இயந்திரத்திலிட்டு அரை, அரைபடு, பொடிபடு, தேய்த்துப் பொடிசெய், அராவிச் சொரசொரப்பாக்கு, அராவித்தீட்டு, பட்டையிடு, பற்களால் அரை, மென்று பொடி செய், தேய்த்து வழவழப்பாக்கு, உஜ்ய்புமூலம் கூர்மைப்படுத்து, சாணையிட்டுத் தீட்டு, திருகு இசைக்கருவியின் திருகை இயக்கு, திருகிசைக் கருவி இயக்கு, கடுமையாக உழை, கொடுமைப்படுத்து, அடக்குமுறை செய், தொல்லைப்படுத்து, மிகுவரியால் கடுந்துயர்ப் படுத்து.
Grinder
திரிகைக்கல், அரைப்பான், இயந்திர ஆட்டுக்கல்
Grinder
n. அரைப்பவர், தீட்டுபவர், இயந்திரம், அரைக்கும் கருவி, இயந்திரத்தின் மேற்பகுதி, திரிகைக் கல், கடைவாய்ப் பல் உணவை அரைக்கும் பல், தேர்வுக்காக மாணவர்களைப் பயிற்றுபவர், கடுமையாக உழைக்கும் மாணவர்.
Grindery
சாணை பிடிக்கும் இடம்
Grindery
n. கத்தி முதலியவற்றைச் சாணைபிடிக்கும் இடம், மிதியடி செய்பவர்களின் துணைப்பொருட்கள்.
Grinding
n. மாவரைத்தல், மாவரைக்கும் ஓசை, உராய்வொலி, ஊழிய வேலை, கடின வேலை, சிறப்புத் தேர்வுக்காக கடுமையாகப் படித்தல், (பெ.) கொடுமைப்படுத்துகிற.
Grindstone
n. இயந்திரம், மாவரைக்கும் இயந்திரம், சாணைதீட்டும் கருவி.
Gringo
n. அயலார், அயல்நாட்டவர்.
Grip
-1 n. பிடி, இறுக்கப்பிடிப்பு, கைப்பிடிப்புப்பாணி, அடையாள வகையான பிடிப்புமுறை, பற்று கருவி, இயந்திரத்தின் பிடிக்கும் பகுதி, கைப்பிடி, பிடிப்பாற்றல், பிடிப்பாற்றல் தடை, பிடிப்பர்ற்றல் வலு, துயரின் பிடி, நெருக்கடி, அடக்கியாளும் ஆற்றல், ஆட்சித்திரம், கட்டுப்ப
Grip
-2 n. சிறு பள்ளம், குழி, வடிகால்.
Gripe
n. இறுகுபிடி, கையால் பற்றுகை, வன்முறைக்காவல் வைப்பு, பிடிப்பாற்றல், கட்டுப்பாடு, கைப்பிடி, (வினை) பற்று, இறுகப் பிடி, கொடுமைப்படுத்து, அல்லற்படுத்து, நோவூட்டு, வயிற்று, வேதனை உண்டுபண்ணு, படகைக் கயிற்றால் பிணித்து அசையாமல் கட்டு, கப்பல் வகையில் காற்றின் உந்தலுக்கு ஆளாகு.
Gripes
n.pl. கடு வயிற்றுவலி, குடல்நோய், நோவு, படகுகளைத் தளத்துடன் இறுக்கிக்கட்டும் கயிறு,
Gripe-water
n. குடல்வழி மருந்து.
Grippe
n. (பிர.) பெருஞ் சளிக்காய்ச்சல்.
Grisaille
n. ஒருவண்ணத்திறமாகச் சாம்பல்நிறச் சாயல்களில் அமைவுறும் புடைப்பியல் ஓவிய ஒப்பனை.