English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Guest-chamber
n. விருந்தினர் அறை.
Guest-house
n. விருந்தினர் மாளிகை, உயர்தரத் தங்கல்விடுதி, மடத்து வரவேற்பு மனை, ஆதரவகம்.
Guestnight
n. விருந்திரவு, கழகங்களிலும் கூட்டுப் பந்திக்குழுக்களிலும் கல்வி நிலையங்களிலும் வௌத விருந்தினரை வரவேற்று மகிழும் நாளிரவு.
Guest-room
n. விருந்தறை, விருந்தினர் தங்கும் பகுதி.
Guest-rope
n. வால் கயிறு, படகினை நிலைப்படுத்துவதற்காக இணைக்கப்படும் இரண்டாவது கயிறு, தொங்கு கயிறு, கூடவேவரும் படகுக்குப் பிடிகொடுப்பதற்காகக் கப்பலுக்கு வௌதயே தொங்கவிடப்படும் கயிறு.
Guestwise
adv. விருந்தினர் என்னும் முறைமையில்.
Guffaw
n. வெடிப்புச் சிரிப்பு, (வினை) உரக்கச்சிரி.
Guichet
n. கதவிற் புழைவாயில், மதில் இடைவழி மாடம், கம்பியிட்ட பயணச்சீட்டுப் புழைமாடம்.
Guidance
n. வழித்துணை, கற்பித்தல், அறிவுரை, போதனை, மேலாண்மையுதவி, தலைமைப் பொறுப்பு.
Guide
n. வழிகாட்டி, வழித்துணைப்பணியாளர், ஊதியம், பெற்றுப் பிரயாணிகளுடன் செல்லுபவர், ஸ்விட்சர்லாந்து நாட்டில் மலையேறுதலைத் தொழிலாக கொண்டவர்கள், படைத்துறை வேவுப் பணியாளர்கள், கடற்படைக் கப்பல்கள் இயங்க மூலமாதிரியாயியங்கும் கலம், முன்மாதிரி, தலைவர், வாழ்க்கை வழிகாட்டி, அறிவுரையாளர், ஆசிரியர், பெண்சாரண இயக்கத்தினர், பெண் சாரணர், வழிகாட்டுவது, வழிகாட்டும் தத்துவம், வழிகாட்டும் நுல், பயண வழி விளக்க நுல், மூலக் கோட்பாடுகளடங்கிய சுவடி, யையேடு, இயந்திர வகையில் இயக்கும் தண்டு, இயக்கம் தூண்டும் உறுப்பு, குறித்துக்காட்டும் அடையாளம், நிலை சுட்டிக் காட்டும் குறி, (வினை) வழிகாட்டு, வழிகாட்டியாகச் செயலாற்று, வழித்துணை செல், இட்டுக்கொண்டு செல், முன்செல், நடத்து, செயற்படுத்து, தூண்டு, முறைப்படுத்து, வழிப்படுத்து, நெறிப்படுத்தும் கோட்பாடாயமை, கடைத்தேற்றம் இலக்காயமை, தூண்டுதற் காரணமாயியங்கு, தலைமை ஏற்று ஆட்சி நடத்து.
Guide-book
n. பயணத் துணைச்சுவடி, வழிகாட்டி ஏடு.
Guide-post
n. கைகாட்டி மரம், வழிவிளக்கக் கம்பம்.
Guider
n. வழிகாட்டுபவர், நெறிப்படுத்துகிறவர், வழிகாட்டுவதற்கான அமைவு, பெண் சாரணப்படையின் தலைவர்.
Guiderail
n. வளைவிலே வண்டிகள் தண்டவாளங்களிலிருந்து விலகாமல் செல்ல உதவும் மிகைத் தண்டவாளம்.
Guide-rope
n. பாரந்தூக்கியில் பொருள் இயக்க நெறிப்படுத்தும் கயிறு.
Guidon
n. பறக்கும் முனை கூரியதாயிருக்கும் படைத்துறைத்துகிற்கொடி.
Guild
n. கூட்டுறவுக் குழு, தொழிற்சங்கம், ஒருவர்க்கொருவர் உதவிக்கான சங்கம், பொதுநோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கான கழகம்.
Guilder
n. பழைய ஆலந்து-செர்மன் தங்க நாணயம், தற்கால ஆலந்து வௌளி நாணயம்.
Guildhall
-2 n. லண்டன் மாநகராட்சி மண்டபம்.