English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Guild-hall
-1 n. (வர.)இடைநிலைக் காலத் தொழிற்சங்க மண்டபம், நகர மாளிகை.
Guile
n. வஞ்சம், மோசம், கபடம்ம, இரண்டகம், சூழ்ச்சித்திறம்.
Guiled
a. வஞ்சனையுள்ள, நம்பிக்கைக்கேடு செய்கிற.
Guileful
a. ஏமாற்றுகிற, கபடமுள்ள.
Guileless
a. கபடமற்ற, வஞ்சனையில்லாத.
Guillemot
n. கடற்பறவை வகை.
Guilloche
n. பின்னற்சடை போன்ற சிற்பக்கலை ஒப்பனை, (வினை) பின்னற் சடைச் சிற்ப ஒப்பனை செய்.
Guillotine
n. தலைவெட்டு பொறி, தலைவெட்டுவதற்கான கத்தி அலகுடைய கொலைத்தண்டனை அறுவை மருத்துவக்கருவி, தாள் வெட்டுவதற்கான இயந்திக் கருவி, வைக்கோல் தறிக்கும் கருவி, சட்டமன்ற நடைமுறை நடைமுறை வகையில் விவாதத்தைச் சுருக்கம் பொருட்டுக் கையாளப்படும் கண்டிப்பான நடைமுறை, (வினை) தலைவெட்டு பொறியால் தலையை வெட்டு, கண்டிப்பான நடைமுறையைப் பயன்படுத்து, விவாதத்தைச் சுருக்கு.
Guilt
n. குற்றப்பழி, குற்றப்பொறுப்பு, குற்றத்தன்மை, சட்டத்தை மீறியுள்ள நிலை, தண்டனைக்குள்ளாகத்தக்க நிலை.
Guiltless
a. குற்றமற்ற, பழி பாவமற்ற, பாவம் செய்தறியாத.
Guilty
a. குற்றமுடைய, குற்றவாளியான, குற்றத் தண்டனைக்குரிய, குற்றமெனத் தெரிந்திருக்கிற, குற்றம் பொருந்திய எண்ணத்தினால் தூண்டப்பட்ட, குறிப்பிட்ட குற்றம் செய்திருக்கிற, கொடிய.
Guinea
-1 n. ஆப்பிரிக்காவின் மேற்குக் கடற்கரைப் பகுதி.
Guinea
-2 n. செலாவணியற்றுப்போன 21 வௌளி மதிப்புடைய ஆங்கில நாட்டுத் தங்க நாணய வகை, கினி நாணயத்தின் மதிப்பு, (பெ,) ஒரு கினி விளையுள்ள.
Guinea-corn
n. தானிய வகை.
Guinea-fowl
n. கினியாக் கோழி, வௌளைப்புள்ளிகளுடன் கூடிய சாம்பல் நிறமுள்ள ஆப்பிரிக்க மாநிலப் பறவை வகை.
Guinea-grass
n. கின்னிப் புல், தினை இனத்தைச் சேர்ந்த நீண்ட ஆப்பிரிக்க புல் வகை.
Guinea-hen
n. கினியாக் கோழியின் பெடை.
Guinea-pig
n. சீமைப் பெருச்சாளி, சிறு தென்அமெரிக்க கொறி விலங்கு வகை, மருத்துவத்துறையில் தேர்வாய்புக்கு தம்மை ஒப்படைப்பவர்.
Guinea-worm
n. நரம்புச் சிலந்திப்புழு.
Guinness
n. இன்தேறல் வகை, இன்தேறல் வகை கொண்ட கண்ணாடிக்கலம்.