English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Hatchety
a. கைக்கோடாரி போன்ற.
Hatching
n. நேர்த்தியான கோடுகள் மூலம் நிழல் வண்ணங்காட்டுதல்.
Hatchment
n. (கட்.) மரபுச்சின்னங்களைத் தாங்கிய கேடயம், இறந்தவருடைய படைக்கலங்களைக் குறித்த வீட்டு முகப்புத்தகடு.
Hatchway
n. (கப்.) தளப்புழைவாய், சரக்குகளை இறக்குவதற்காகக் கப்பல் தளத்திலுள்ள புழை, நிலத்தளத்திலுள்ள புகுவாயில், சுவரிலுள்ள திட்டிவாயில், மோட்டிலுள்ள புழைவாய்.
Hate
n. வெறுப்பு, பகைமை, (வி.) பெருவெறுப்புக்கொள், அருவரு, கறவு.
Hateful
a. வெறுப்புணர்ச்சியைத் தூண்டுகிற, அருவருப்பான, வெறுக்கத்தக்க, வெறுப்புக்கொண்டிருக்கிற, வெறுப்பைக் காட்டிக்கொள்ளுகிற.
Hatful
n. தொப்பி கொள்ளக்கூடிய அளவு.
Hat-guard
n. தொப்பி காற்றில் அடித்துக்கொண்டு போகாமற் காக்கும் மென்கயிறு.
Hath, v. have
என்பதன் பழையவழக்கு நிகழ்காலப் படர்க்கை ஒருமை வடிவம்.
Hat-peg
n. தொப்பி மாட்டி.
Hatpin
n. தொப்பியை மயிரோடு இணைப்பதற்கான நீண்ட ஊசி.
Hat-plant
n. தொப்பிகள் செய்வதற்குப் பயன்படும் தக்கைச் செடிவகை.
Hatrack
n. தொப்பி மாட்டும் சட்டம்.
Hatred
n. பெருவெறுப்பு, பகைமை, வன்மம், காழ்ப்பு.
Hatstand
n. தொப்பி மாட்டுவதற்கான முளைகளுடன் கூடிய நிலைச்சட்டம்.
Hatted
a. தொப்பியணிந்துள்ள, தொப்பியினால் மூடப்பட்ட.
Hatter
n. தொப்பி செய்பவர், தொப்பி விற்பனையாளர்.
Hatti, hattisherif
n. (பெர்.) (வர.) துருக்கி சுல்தானால் கையெழுத்திடப்பட்ட நிலவரக் கட்டளை.
Hat-trick
n. மாந்திரிகன் தொப்பியை வைத்துக்கொண்டு செய்யும் மாயவித்தை, மரப்பந்தாட்டத்தில் அடுத்தடுத்து மும்முறை பந்து வீசி இலக்குக்கட்டைகளை வீழ்த்தி வெற்றி பெறுதல், விளையாட்டுகளில் ஒரே ஆட்டக்காரர் மூன்று இலக்கு எடுத்தல்.
Hauberk
n. போர்கவசம், இருப்புக் கவசம்.