English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Heart-whole
a. முழு மனமார்ந்த, பிற ஈடுபாடற்ற, உள்ளார்ந்த, கபடமற்ற, கலக்கமற்ற, முழு ஈடுபாடுடைய.
Heart-wood
n. மரக்காழ், மர வைரம்.
Hearty
n. மாலுமிகளை விளிக்கும் சொல், பல்கலைக்கழக வழக்கில் உடற்பயிற்சி விளையாட்டாளர், (பெ.) உள்ளார்ந்த, உளங்கனிந்த, ஊக்கமுள்ள, தீவிரமான, ஏராளமான, வளம் நிறைந்த.
Heat
n. சூடு, பொருள்களின் உயர் வெப்பநிலை, வெப்பம், வானிலையின் கொதிப்பு, பொறுக்கமுடியா வெப்பம், வெப்ப உணர்ச்சி, உடல் வெப்பு, வெக்கை, புழுக்கம், மிகு வெப்ப நிலை, வெயிலின் உச்சநிலை, வெப்பமிக்க வேளை, வெப்பார்ந்த வானிலை, தோலின் செந்நிறம், வியர்க்குறு, கடுங்காரச்சுவை, எரிப்பு, உணர்ச்சியின் உச்சநிலை, உணர்ச்சி வேகம், எழுச்சி, சீற்றம், வெகுளி, பரபரப்பு, விறுவிறுப்பு, தீவிர கட்டம், வேகம், விரைவு, சிற்றின்ப வேகம், விலங்குப்பெடையின் வேட்கைப் பருவம், விளையாட்டுக்களில் ஒரு தடவை ஆட்டம், (வி.) சூடாக்கு, குருதிக் கொதிப்பூட்டு, உணர்ச்சி வேகம் உண்டுபண்ணு, சினமூட்டு, சூடாகு.
Heat-apoplexy
n. கடுவெயில் அதிர்ச்சி.
Heater
n. சூடேற்றுபவர், சூடுட்டுங் கருவி, அறையை அல்லது கட்டிடத்தை வெப்பமாக்கும் அமைவு, சலவைத் துணி தேய்க்கும் பெட்டியைச் சூடாக்குங் கருவி.
Heath
n. கரம்பு நிலம், புதர்க்காடு, புதரடைந்த சமவௌத, புதர்ச்செடி வகையின் பெயர்.
Heath-bell
n. புதர்ச்செடியின் மலர்.
Heath-berry
n. கரம்பு நிலங்களில் காணப்படும் புதர்ச்செடிகளில் உள்ள கொட்டைக் கனிவகை.
Heath-cock
n. கறுப்புக் காட்டுச் சேவல்.
Heathen
n. புறச் சமயத்தினர், கிறித்தவரோ யூதரோ இஸ்லாமியரோ அல்லாத பிற சமயத்தார், மத நம்பிக்கையற்றவர், சமயம் பற்றிய அக்கறையற்றவர், மெய்விளக்கம் பெறாதவர், (பெ.) புறச் சமயத்தைச் சார்ந்த, மெய்விளக்கம் பெறாத, மத நம்பிக்கையற்ற, சமயப் பற்றற்ற.
Heathendom, heatheness, heathenism, heathenry,
புறச் சமயத்தினர் மத அமைப்பு, சமய நம்பிக்கை இல்லாமை, புறச்சமயத்தைச் சேர்ந்த பண்பு, காட்டு மிராண்டித்தன்மை, புறச்சமயம் நிலவியுள்ள உலகப் பகுதிகள்.
Heather
n. குட்டையான புதர்ச்செடி வகை.
Heather-ale
n. ஸ்காத்லாந்து நாட்டில் புதர்ச்செடி வகையின் மலர்களினின்று இறக்கப்பட்ட பேர்போன மதுவகை.
Heather-bell
n. குட்டையான புதர்ச்செடியின் மலர் வகை.
Heather-mixture
n. புதர்ச்செடியின் பல்வண்ண மலர்களைப் போன்று பல்வண்ணங்களைக் கொண்ட துணிவகை, (பெ.) புதர்ச்செடி மலரின் பல்வண்ணங்களைக்கொண்ட.
Heathy
a. புதர்ச்செடிகள் நிறைந்துள்ள.
Heats
n. pl. விளையாட்டுப்போட்டிப் பந்தய முடிவாட்டத்தில் பங்கு கொள்பவர்களை முடிவு செய்யும் துணைப்பந்தய ஆட்டங்கள்.
Heat-spot
n. வேனிற் கொப்புளம், வெப்பநிலை அறியும் தோற்பகுதி.
Heat-stroke
n. கடு வெப்பத்தினால் ஏற்படும் மயக்க நோய்.