English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Heat-wave
n. அனற் காற்று, வளி மண்டலத்திலுள்ள கடு வெப்பக் காற்று நிலை.
Heave
n. தூக்கு முயற்சி, எறிவு, வாங்கி வீசும் முயற்சி, அலை எழுச்சி, கடல்நீர் அமிந்தமிழ்ந்தெழுதல், பொங்குதல், மற்போர்ப் பொறித்தட்டு முறைகளில் ஒன்று, (மண்.) படுகைப் பொருள் மாற்றுப் பெயர்ச்சி, கனிப்பாறைப் பொருள் மாற்றுப் பெயர்ச்சி, (வி.) வலித்தி ழு, வலித்திழுத்து உயர்த்து, வலித்திழுத்துத் தூக்கு, தூக்கி எறி, வாங்கி வீசு, ஏங்கு, நெடுமூச்சு விடு, வீங்கு, விரிவுற்றெழு, கடல் வகையில் எழுந்து பொங்கு, அமிழ்ந்தமிழ்ந்தெழு, நெஞ்செழுந்தெழுந்தமிழ், அலையெழு, குமட்டு, ஓங்காரி, (மண்.) படுகையில் பொருட்பெயர்ச்சி செய்து மாற்று, கனிப்பாறை வகையில் பொருட்பெயர்ச்சி செய்து மாற்று.
Heaven
n. பேரின்ப வீடு, இன்ப உலகம், உம்பருலகம், வானுலகு, கடவுளும் தேவதூதரும் ஊடாடுமிடம், பேரின்பம், இறைவன், ஆண்டவன், வானுயர்வௌத, முகில் மண்டலம், மீயுயர்நிலை, (செய்.) வான் முகடு, ஆகாயம்.
Heaven-born
a. தெய்வத் தன்மையுள்ள, தெய்வப் பிறப்புடைய.
Heavenly
a. வானுலகத்துக்குரிய, வானவௌத சார்ந்த, தெய்வத் தன்மையுடைய, மனித எல்லை கடந்த மேம்பாடு உடைய, அளப்பருஞ்சிறப்பு வாய்ந்த.
Heavenly-minded
a. தூய்மையான, திருநிலையான, கடவுட்பற்றுள்ள, சமயப்பற்றுள்ள.
Heavens
n. pl. வான்முகடு, ஆகாயம்.
Heaves, n.. pl.
முட்டடைப்பு, நெஞ்சுப்பைத் தோல் வீக்கத்தால் இருமலுடன் திணறல் ஏற்படும் குதிரைநோய் வகை.
Heavier-than-air
a. வானுர்திகளில் காற்றைவிட எடை குறைந்த வளிப்பையினால் உயர்ந்தியங்காத.
Heaviside layer
n. வளிமண்டல அலைத்தடை எல்லைத்தளம், வானொலி அலைகளைத் தடுத்தெறிந்து நிலவுலகு சுற்ற வைக்கும் வளிமண்டல எல்லைத்தளம்.
Heavy
a. எடைமிக்க, கனமான, பாரமேற்றப்பட்ட, மிகுதியான ஒப்புச் செறிவெண் கொண்ட, அழுத்தும் சுமையுடைய, தாக்குவிசைமிக்க, மோதுவிசையார்ந்த, பொறுப்பான, முக்கியமான, வீறார்ந்த, கடுகடுப்பான, மொத்தையான, திண்ணிய, மாவகையில் கெட்டியான, அப்பவகையில் பொங்காது கடுந்தோடாயிருக்கிற, உணவு வகையில் எளிதில் செரிக்காத, அலங்கோலமாக ஆடையணிந்த, குரல்வகையில் ஆழ்தொனியுடைய, நிலப்பாதை வகையில் ஒட்டிக்கொள்கிற, கடுநடை வாய்ந்த, துயரார்ந்த, பொறுக்க முடியாத துயரில் அழுத்துகிற, துயர்வகையில் அழுத்துகிற, துயர் குறித்த, எழுச்சியற்ற, கிளர்ச்சியற்ற, சோர்ந்த, முகவாட்டமான, ஊக்கமில்லாத, எளிதில் கிளர்ச்சியூட்ட இயலாத, கடு உழைப்புக்குரிய, கடுமுயற்சி வாய்ந்த, எளிதில் இயங்காத, முயற்சி எளிமையற்ற, படைக்கல வகையில் பாரமிக்க, படைத்துறை வகையில் கனமான படைக்கலந் தாங்கிய, தொழில் வகையில் பெருந்தரமான பொருளாக்கத்தில் ஈடுபட்ட.
Heavy-armed
a. பருத்த போர்க்கவசத்தைத் தாங்கிய, எடைமிக்க படைக்கலந் தாங்கிய.
Heavy-handed
a. அருவருப்பான, தடுமாற்றமுடைய, அமைப்பில் குறைபாடுடைய, அல்லற்படுத்துகிற.
Heavy-headed
a. பெரிய தலையுடைய, கனத்த தலையுடைய, மடத்தனமான, அறிவற்ற, சோம்பலான, அரைகுறைத் தூக்கமுடைய.
Heavy-hearted
a. மனத்துயரால் வாடுகிற.
Heavy-spar
n. பாரியக் கந்தகை.
Heavy-weight
n. மட்டமான அளவுக்கு மேற்பட்ட கனமுடைய பொருள், மட்டளவு மீறிய கனமுடையவர், கேளிக்கைகளில் கனமிக்க வகுப்பினர், குத்துச்சண்டையில் தொழில் துறையாளரிடையே 1ஹ்5 கல் எடைக்கும் விருப்பத்துறையாளரிடையே 1ஹ்க்ஷ் கல் எடைக்கும் மேற்பட்ட கனமுடையவர்.
Hebdomad
n. ஏழன் அடுக்கு, வாரம், மனித ஆற்றலை மீறிய ஆவிகளின் தொகுதி.
Hebdomadal
a. வார முறையான, வாரந்தோறும் நிகழ்கிற.
Hebdomadary
n. திருக்கோயில் அல்லது கன்னிமாடத்து வாரத் தவணைப் பணியாளர், (பெ.) வாரஞ் சார்ந்த, வாரந்தோறுங் கூடுகிற.