English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Hector
n. தற்புகழ்ச்சியாளர், வீம்பு பேசுபவர், எளியவரைக் கொடுமை செய்பவர், கொடுமைக்காரர், (வி.) மெலியாரைக் கொடுமை செய், வீறாப்பு பேசு.
Heddles
n. pl. தறியில் ஊடிழை நுழைந்து செல்லும் புழையுடைய கயிறு அல்லது கம்பி.
Hedge
n. புதர் வேலி, எல்லைக் குறுமர வரிசை, எல்லைக் குத்துக்கல் வரிசை, புல்கரண் எல்லைக்கோடு, எல்லை குறிக்கும் பொருள் வரிசை, எல்லை, வேலி, பந்தயம் சூதாட்ட முதலியவற்றில் இழப்பீட்டுக் கைகாப்புத்துறை, இழப்பீட்டுக் கைகாப்பு ஏற்பாடு, (வி.) குறுவேலியிட்டு வளை, சூழ், அடைப்பு செய், தடு, இடையிட்டுத் தடையமை, தடுத்து நிறுத்து, காவல் செய், கைகாப்புத் துறை மூலம் இழப்பிலிருந்து தன்னைக் காத்துக்கொள், தடைவேலிகள் வகு, பொறுப்பேற்றலைத் தவிர்.
Hedgehog
n. முள்ளொலி, முள்ளமைப்புக் காப்புடைய சிற்றுயிர் வகைகளில் ஒன்று, படைத்துறையில் தடையரண் வேலிகளால் சூழப்பட்ட தனிநிறைவுடைய காப்பிடம், ஒப்புரவற்றவர், பழகப் பொருந்தாதவர்.
Hedge-priest
n. தாழ்நிலையுடைய கல்லாச் சமயகுரு.
Hedge-row
n. புதர்வேலி வரிசை, மரவரிசை வேலி.
Hedge-school
n. கீழ்த்தரப்பள்ளி, திறந்தவௌதப் பள்ளி.
Hedgesparrow
n. வேலிக்குருவி, வேலிகளில் உள்ள இசைப்பறவை வகை.
Hedonic
a. இன்பத்துக்குரிய.
Hedonics
n. pl. அறநுலில் இன்பக் கோட்பாடு, உளநுலில் இன்பவியல்.
Hedonism
n. அறநுல் வகையில் இன்பமே சிறந்தநலம் என்னுங் கோட்பாடு.
Hedrangea
n. வௌளை நீலக் கருஞ்சிவப்பு நிறங்களையுடைய உருள் பூங்கொத்துக்களைக் கொண்ட குறுஞ் செடிவகை.
Heed
n. கவனம், முன்னறிவு, எச்சரிப்புணர்வு, கருத்துணர்வு, (வி.) கவனத்திற் கொள், கருத்திற் கொள், அக்கறை கொள், பொருட்படுத்து, கூர்ந்துபார், கருதிப்பேணு, உற்றுக்கவனி.
Heedful
a. கவனமுள்ள, முன் கருதியிருக்கிற.
Hee-haw
n. கழுதையின் கனைப்பு, உரத்த சிரிப்பு, (வி.) கழுதைப்போலக் கத்து.
Heel
-1 n. குதி, குதிகால், விலங்கின் குளம்புக்கு மேற்பட்ட பின்பகுதி, குளம்பின் பின்பகுதி, காலடி, விலங்கின் பாதம், புதையடியின் குதியடிக்கட்டை, காலுறையின் குதிகாற்பகுதியின் பின்புறம், யாழ் வில்லின் கைப்புற அடி, வளைகோற் பந்தாட்டத்தில் கோலின் அடிவளைவு, கப்பலடிக் க
Heel
-2 n. பார ஏற்றத் தாழ்வாலோ காற்றழுத்தத்தாலோ ஏற்படும் கப்பலின் சாய்நிலை, சரிவு, (வி.) கப்பல் வகையில் சிறிது சாய்வுறு, சரிவுறு, சாயச் செய், சரிவுறச் செய்.
Hefty
a. வலிமை வாய்ந்த, திண்ணிய.
Hegemonic
a. தலைமை வாய்ந்த, மேலாட்சி செய்கிற.
Hegemony
n. தலைமை, கூட்டாட்சித் தலைமைநிலை, முதன்மையான செல்வாக்கு.