English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Heliochromy
n. இயல்வண்ண நிழற்படப் பதிவுமுறை.
Heliogram
n. சூரியன் ஔதக்கதிர்களை எதிரொளிப்படுத்திக் காட்டி அனுப்பப்படும் அடையாளச் செய்தி.
Heliograph
n. ஔத படிவத்தால் ஏற்படும் செதுக்குருவம், நிழற்படமுறைச் செதுக்குப்படிவம், கதிரவனைப்படம் பிடிக்கும்நிழற்படக் கருவியமைவு, கதிரவன் ஔதக்கதிர்களை எதிரொளிப்படுத்திக்காட்டி அடையாளச் செய்தி அனுப்பும் முறை, ஔதச்செறிவுமானி, (வி.) கதிரவன் ஔதக்கதிர்களை எதிரொளிப்படுத்திக்காட்டி அடையாளச் செய்தி அனுப்பு, ஞாயிற்றின் ஔதபடுவதால் ஏற்படும் மாறுபாட்டு மூலம் நிழற்படமெடு.
Heliographic
a. கதிர்மண்டல ஆய்வுவிளக்கம் சார்ந்த, ஔதயூடுருவு செதுக்குமானம் பற்றிய, கதிர் எதிரொளிப்பு அடையாளச் செய்தி குறித்த.
Heliography
n. கதிரவன் மண்டலம் பற்றிய ஆய்வு விளக்கம், ஔதயூடுருவலால் ஏற்படும் செதுக்குமானம், கதிரவன் ஔதக்கதிர்களை எதிரொளிப்படுத்திக்காட்டி அடையாளச் செய்தி அனுப்புதல்.
Heliogravure
n. நிழற்படமுறைச் செதுக்குமானம், நிழற்படி எதிர்ப்படியை உலோகத் தகட்டுக்கு மாற்றி இழைத்த செதுக்கு வேலை.
Heliolithic
a. பரிதிக்கல் பண்பாடு சார்ந்த, கதிரவன் வழிபாடும் வழிபாட்டுப் பெருங்கல்லும் இடம்பெறும் நாகரிகப் படிக்குரிய.
Heliometer
n. குறுக்கைமானி, கதிர்மண்டல விட்டத்தையோ விண்மீன்களிடைத் தொலையையோ அளக்கும் கருவி.
Helioscope
n. கண்ணுக்குக் கேடின்றிக் கதிரவன் மண்டலத்தைக் காண்பதற்கு உதவும் கருவி.
Heliotherapy
n. கதிர் மருத்துவமுறை, கதிரொளிப்படிவு மூலம் நோய் குணப்படுத்தும் மருத்துமுறை.
Heliotrope
n. மணமிக்க கருஞ்சிவப்பு மலர்களையுடைய செடிவகை, கருஞ்சிவப்பு மலர்வகையின் மணம், குருதிநிற மணிக்கல் வகை.
Heliotropic
a. (தாவ.) ஔத நோக்கிய சாய்வுத்தொடர்பான, ஔதநோக்கிச் சாய்கிற.
Heliotype
n. பசை ஔதப்படம், ஔதபடியும் பசைபூசிய தகட்டினின்று கிடைக்கும் படம்.
Heliscoop
n. வானுர்திக் காப்புத் திருகுவலை.
Helisois
n. வெயிற்காட்ட நோய், (தாவ.) கண்ணாடி வழிஔதக்கதிர்கள் செறிவுறலால் இலைகள்மீது ஏற்படும் கறைப்புள்ளிகள்.
Helium
n. பரிதியம், கதிரவன் மண்டலத்திலிருப்பதாகக் கருதப்பட்ட தனிமவளி, 1க்ஷ்6க்ஷ்-இல் முதல்முதலாகக் கண்டுணரப்பட்ட தனிமம்.
Helix
n. திருகு சுழல், திருகுசுழல் வட்டம், புறச்செவி விளிம்பு, நத்தைப் பேரினம், (க-க.) திருகுசுழல் ஒப்பனைச் சிற்பம்.
Hell
n. நரகம், பழியாவிகள் தண்டனை நுகரும் உலகம், வெம்பழி ஆற்றல் தெய்வங்களின் தொகுதி, துன்ப உலகு, இறந்தோர் உலகு, கடுந்துயர் நிலை, பழிநிலை, சூதாடுமனை, ஆட்டவகைகளில் சிறைகாப்புக் கட்டம், தையல்மனைக் கூளக்குழி.
Hell-cat
n. குதிரி, அடங்காப்பிடாரி.
Hellebore
n. பித்தத்தைக் குணப்படுத்துவதாகப் பண்டு நம்பப்பட்ட செடி வகைகளில் ஒன்று, ரோசா மலர்ச்செடி வகை.