English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Hegira
n. முகமதுநபி நாயகம் மக்கா நகரினின்று மதீனா நகர் நோக்கிச் சென்ற ஓட்டம், இஸ்லாமிய சகாப்த தொடக்கம்.
Heifer
n. ஈனாப்பெற்றம், கன்றுபோடாத இளம்பசு.
Heigh
int. ஊக்குதற் குறிப்புவிளி, உசாவுதற் குறிப்புவிளி, மகிழ்வுக் குறிப்பு.
Heigh-ho
int. சோர்வுக்குறிப்பு, மனக்கசப்புக் குறிப்பு.
Height
n. உயரம், உயர்வு, உயர்த்தின் அளவு, தலைக்கு மேலுள்ள தொலை, மேல்நோக்கிய தொலை, மீகோணம், உயர்ந்த இடம், உயரத்திலிருக்கும் பொருள், குன்று, மேடு, ஏற்றம், மேல் நோக்கிய சரிவு, உச்சி, உச்சநிலை, உச்ச அளவு, உயர்சிறப்பு, உயர்தகுதி, மேம்பாடு.
Heighten
v. உயர்வாகு, மிகைப்படுத்து.
Heir
n. உரிமையாளர், மரபுவழி உடைமைக்கு உரியவர், சட்டமுறை உரிமை உடையவர், தகுதி உரிமையாளர், பண்புக்கு உரிமைப்பட்டவர், பின்தோன்றல், வழித்தோன்றல், மைந்தன், முதல்மகவு.
Heiress
n. பெண் உரிமையாளர், பெருஞ்செல்வத்தை உரிமையாகப் பெற்றுவிட்ட மாது, பெருஞ்செல்வத்தை உரிமையாகப் பெற இருக்கிற பெண்.
Heirless
a. பின்னுரிமையாளர் இல்லாத.
Heirloom
n. சொம்மு, மரபுரிமையாளர் உடைமையுடன் பழக்கப்படி வந்து சேரும் உடைமைப் பொருள், குடும்ப மரபாய் வரும் உடைமைப் பொருள், வழிவழி உடைமை.
Held, v. hold
என்பதன் இறந்தகால-முடிவெச்சம்.
Heliacal
a. கதிரவனைச் சார்ந்த, சூரியனுக்கு அணித்தான, கதிரவன் மண்டலத்தோடியைந்து காணப்பெறுகிற, கதிரவன் மண்டலத்திற்கு மிக அருகாகத் தோற்றுகிற.
Helianthus
n. சூரிய காந்தியை உட்படுத்திய நெஞ்சிப் பேரினம்.
Helices, n. helix
என்பதன் பன்மை.
Helicon
n. கிரேக்க கலைத்தெய்வங்களின் இருப்பிடமான மலை, கவிதை அகத்தூண்டுதலின் தலையூற்று.
Heliconian
a. கிரேக்க கலைத்தெய்வங்களின் இருப்பிடமான மலைக்குரிய, கவிதை அகத்தூண்டுதல் தருகிற.
Helicopter
n. செங்குத்தாக மேலெழுப்பி இறங்கவல்ல திருகு வானுர்தி.
Heliocentric
a. கதிரவன் மண்டல மையத்திலிருந்து காணும் நிலைப்பட்ட, கதிரவனையே மையமாகக் கொண்ட.