English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Hellene
n. இனத்தூய்மையுடைய பண்டைக் கிரேக்கர், தற்கால கிரேக்க நாட்டின் குடியுரிமையினர்.
Hellenic
a. கிரேக்கருக்குரிய, கிரேக்க இனத்துக்குரிய.
Hellenism
n. கிரேக்க சொல்மரபு, கிரேக்க இலக்கணத் தொடர்பு மரபு, கிரேக்க இனப் பண்பாடு, கிரேக்க இனத்தைப் பார்த்துப் பின்பற்றிய போலிப்பண்பாடு, கிரேக்க தேசீயம், கிரேக்க மரபுவழி பின்பற்றும் கோட்பாடு, கிரேக்க மொழி பின்பற்றும் பண்பு.
Hellenist
n. கிரேக்க மொழி வழங்கும் கிரேக்கரல்லாதவர், கிரேக்கமொழி வல்லுநர், கிரேக்கமொழியும் வழியும் பின்பற்றிய யூதர்.
Hellenistic, Hellenistical
a. கிரேக்கரைச் சார்ந்த, அலெக்ஸாண்டர் காலத்துக்குப்பின் ஏற்பட்ட அயற்கலப்பு மிகுந்த நிலையுடைய கிரேக்க இனமொழிப் பண்பாடுகளுக்குரிய.
Hell-hound
n. நரகக் கொடும்பேய், நரக வேட்டை நாய்.
Hellish
a. நரகத்துக்குரிய, நரகம் போன்ற, மிகக்கொடிய, பயங்கரமான.
Hellward
a. நரகம் நோக்கிய, (வினையடை) நரகம் நோக்கி.
Helm
-1 n. தலைக்கவசம், கவசத் தலைப்பகுதி, தலைக்கவசம் போன்ற பொருள், புயலின்போது அல்லது புயலுக்குமுன் மலைமுகட்டில் தவழும் முகில், வான்கோழித் தலைச்சூட்டு, மலர்களின் மீ உயர் கவிவிதழ்.
Helm
-2 n. பயின்கருவிப்பிடி, சுக்கான்பிடி, பயின்கலம், சுக்கான் திருப்புவதற்குரிய இடம், ஆட்சிப்பிடி, செயலாட்சி, இயக்குமுதன்மை, (வி.) தலை நின்றியக்கு.
Helm-cloud
n. புயலின்போது அல்லது புயலுக்குமுன் மலைமுகட்டின்மீது காணப்படும் முகில்கற்றை.
Helmet
n. தலைக்கவசம், போர்வீரர் கவசத் தலைப்பகுதி, தீயணைப்புப் படைவீரர் தலைகாப்புக் கவிகை, வேனிற் காப்பான அழுத்தத் தோல்தொப்பி, நெட்டிக்காப்பிட்ட வேனிற் பருவத் தொப்பி, வடிகல முகடு, கிளிஞ்சல் வகையின் சிப்பி, (தாவ.) மலர் வகைகளிற் புறவிதழின் வளைந்த மேன்முகடு.
Helminthiasis
n. குடற்புழுவினால் ஏற்படும் நோய்.
Helminthoid
a. குடற்புழு போன்ற உருவுடைய.
Helminthology
n. ஒட்டுயிரிகளான குடற்புழு பற்றிய ஆய்வுநுல்.
Helmsman
n. கப்பல் இயக்குநர்.
Helot
n. ஸ்பார்ட்டா என்ற பண்டைக் கிரேக்க நகரிலுள்ள அடிமை வகுப்பினருள் ஒருவர், அடிமை வகுப்பினர், உரிமையற்றவர்.
Helotry
n. அடிமைகளின் தொகுதி, அடிமை வகுப்பினர் குழு.
Help
n. உதவி, துணை, ஆதரவு, துணைவலு, ஊக்காற்றல், தீர்வு வழி, போக்கு, புகல், உணவு பரிமாற்றம், உதவியாளர், ஆதரவாளர், வீட்டு வேலையாள், தொழிலாளி, (வி.) உதவு, துணையளி, ஆதரவு வழங்கு, வெற்றியில் பங்குகொள், செயலில் துணைசெய், வகைதுறை கருவி வழங்கு, தேவையானவை அளித்துதவு, பகுதி கொடுத்துதவு, பங்கு பெற்றளி, பங்கிட்டளி, துயர் நீக்கு, நோவு அகற்று, தணி.