English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Hepatic
n. செடி வகை, கல்லீரலுக்கு நலஞ்செய்யும் மருந்து வகை, (பெ.) கல்லீரலுக்குரிய, கல்லீரலுக்கு நலஞ்செய்கிற, கல்லீரல் நிறமுடைய.
Hepatitis
n. கல்லீரல் அழற்சி.
Hepatization
n. நுரையீரல் முதலிய பகுதிகள் கல்லீரல் போன்ற பொருளாக இறுகிவிடும் நோய்வகை.
Hepatize
v. நுரையீரல் போன்றவற்றைக் கல்லீரல் போன்ற பொருளாக்கு.
Hepatogenous
a. கல்லீரலில் தோன்றுகிற.
Hepplewhite
n. தட்டுமுட்டுப்பொருள்களுக்குரிய வேலைப்பாட்டுப் பாணிவகையின் பெயர்.
Heptachord
n. ஏழ்நரம்பு வீணை, கிரேக்கரிடை ஏழ்சுர வரிசை.
Heptaglot
n. ஏழு மொழிகளில் வௌதயிடப்பட்ட புத்தகம், (பெ.) ஏழு மொழிகளுக்குரிய.
Heptagon
n. எழுகோணக் கட்டம்.
Heptagonal
a. எழுகோணமுடைய, எழுகோணக் கட்டமான.
Hepta-hedron
n. எழுமுகப் பிழம்புரு, ஏழு முகப்புத் தளங்களையுடைய பிழம்பு வடிவம்.
Heptarchy
n. எழுவர் ஆட்சி, (வர.) பண்டை ஆங்கிலோ-சாக்ஸனியரின் ஏழரசுத் தொகுதி.
Heptasyllabic
a. ஏழசையுடைய.
Heptateuch
n. விவிலிய ஏட்டின் முதலேழு பிரிவுகளின் தொகுதி.
Her(1), pron. she
என்பதன் எழுவாயல்லா வேற்றுமை வடிவம்.
Her(2), pron, she
என்பதன் உடைமைப்பொருள் வேற்றுமை வடிவம்.
Herald
n. கட்டியர், வள்ளுவர், அரசவிளம்பரங்கள் பொது அறிவிப்புகள் தெரிவிப்பதையும் கட்டியப் படிமுறை நடைமுறைகளை ஒழுங்கு செய்து தீர்ப்பளிப்பதையும் தூதுச்செய்திகளை அறிவிப்பதையும் கடமையாகக் கொண்ட அரசியல் உயர்பணியாளர், தூதர், முன்னறிவிப்போர், வருகைமுன் சென்று தெரிவிப்பவர், (வி.) கட்டியங்கூறு, வருகை முன்னறிவி, வரவேற்று உள்ளே இட்டுவா, வாயில் தந்து இட்டுச்செல்.
Heraldic
a. கட்டியம் சார்ந்த, கட்டியருக்குரிய, கட்டிய இயலுக்குகந்த, கட்டியர் பதவிச்சார்பான.
Heraldry
n. கட்டியம், கட்டிய இயல், கட்டியர் பதவி, கட்டிய முறைசார்ந்த குலமரபுச் சின்னங்களின் தொகுதி, கட்டிய ஆரவார அமைதி.