English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
High Chruch
n. சமயகுருமாருக்கும் சமய ஆட்சிக்குழுவினருக்கும் வினைமுறைகளுக்கும் மிகுதிமதிப்பளிக்கும் கோட்பாடு, ஆங்கிலநாட்டுத் திருச்சபையில் ஆட்சிக்குழு வினைமுறைகளுக்கு மதிப்பளிக்கும் கட்சி, (பெ.) சமயகுருமாருக்கும் சமய ஆட்சிக்குழுவினருக்கும் வினைமுறைகளுக்கும் மிகுதி மதிப்பளிக்கிற, ஆங்கில நாட்டுத் திருச்சபையில் குருமார் ஆட்சி வினைமுறைகளுக்குப் பெருமதிப்பளிக்கிற கட்சி சார்ந்த.
Highball
n. நீள்குவளையில் பரிமாறப்படும் விஸ்கி-சோடாக் கலவை.
High-blower
n. சீறுங்குதிரை.
High-born
a. உயர்குடிப் பிறந்த.
Highbrow
n. சார்பற்ற கலையார்வலர், அறிஞர்.
High-browed
a. தனித்தொதுங்கி வாழும் அறிவாளியியல்புடைய.
High-Churchman
n. ஆங்கிலநாட்டுத் திருச்சபையில் சமயகுருமாருக்கும் சமய ஆட்சிக்குழுவினருக்கும் வினைமுறைகளுக்கும் பெருமதிப்பளிக்கும் கோட்பாட்டுடையவர்.
High-faluting
n. பகட்டாரவாரப் பேச்சு, (பெ.) பகட்டாரவாரப் பேச்சுப் பேசுகிற.
Highflown
a. புனைந்துரையான, கடுநடையான.
Highflying
a. உயரப்பறக்கிற, உயர்பேராவலுடைய, மட்டுமீறிய உயர்அவாவுடைய.
High-geared
a. விசையிணைப்பில் மூலச் சக்கரச்சுற்றைவிட விசைச்சக்கரம் பன்மடங்கு மிகுதியாகச் சுற்றும்படி இணைக்கப்பட்ட.
High-handed
a. அடக்குமுறையான, வன்முறையான.
High-hat
n. வீறாப்புடையவர், மட்டுமீறிய தற்பெருமையுடன் நடப்பவர், (வி.) வீறாப்புக்காட்டு, தற்பெருமை மேற்கொள், வீறாப்புடன் ஏளனமாக நடத்து.
High-jinks
n. ஆரவாரக் களியாட்டம்.
Highlander
n. ஸ்காத்லாந்தின் வடமேட்டு நிலத்துக்கு உரியவர்.
Highlands
n. pl. மேட்டுநிலம்.
Highlight
n. முனைப்பான பகுதி, சிறப்புக்கூறு, (வி.) முனைப்பான ஔதயால் விளக்கமாகத் தெரியும்படி செய்.
Highlights
n. pl. மிகு ஔதபடும் இடங்கள், நன்கு புலப்படும் பகுதிகள்.
Highly
adv. மிகுதியாக, உச்ச அளவாக, உச்ச உயர்படியில், உயர்வாக, உயர்விலையாக, உயர்மதிப்புடன், மிகஆதரவாக, மிகவும் சாதமாக, உயர்குடி மரபில்.