English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Holiday resort
விடுமுறை ஓய்வகம்
Holidays
n. pl. நீள்விடுமுறைக்காலம்.
Holily
adv. புனிதமாக, திருநிலையாக.
Holiness
-1 n. புனிதத்தன்மை.
Holiness
-2 n. திருமேனி, போப்பாண்டவரைக் குறித்த மதிப்புக்குறிப்பு.
Holism
n. (மெய்.) முழுமைப் படைப்புக் கோட்பாடு, கூறுகளின் தொகுதிக்கு மேம்பட்ட நுண் உயிர் முழுமைகளிலிருந்து உயர் முழுமை நோக்கி வளர்ந்த படிமலர்ச்சியே படைப்பின் அடிப்படை என்னும் கோட்பாடு.
Holland
n. ஆலந்து நாடு, வடக்கு நெதர்லாந்து மாநிலப்பகுதி, நெதர்லாந்து அரசு, நார்த்துணிவகை.
Hollander
n. ஆலந்துக்காரர், ஆலந்துக் குடிமகன், டச்சுக் கப்பல், ஆலந்து நாட்டுக் கப்பல்.
Hollands
n. கூலத்தினின்றும் செய்யப்படும் தேறல்வகை.
Hollo
n. தொலைவிலுள்ளோரை அழைக்கும் விளிக்குறிப்பு, விளிக்குறிப்பு.
Hollo, holloa
ஆர்ப்பரி, கூவு, வேட்டைநாய்களைக் கூவிக்கொண்டே துரத்து.
Hollow
n. பொள்ளல், உட்புழை, வெறுமை, குழிவு, உள்துளை, பள்ளம், பள்ளத்தாக்கு, வடிநிலம், (பெ.) குழிவான, பள்ளமான, புழையுள்ள, திடமற்ற, கெட்டியாயிராத, வெறுமையான, உள்ளீடில்லாத, வயிற்றில் ஒன்றுமற்ற, பசியுடைய, ஒலிவகையில் முழுத்தொனி அமையப்பெற்றிராத, வஞ்சகமான, வாய்மையற்ற, போலியான, பொய்யான, பொருளற்ற, அறிவற்ற, பண்பற்ற, (வி.) துளையிடு, உட்டுளையுடையதாகச் செய், அகழ், குடை, தோண்டு, (வினையடை) முழுவதும், தீர.
Holloway
n. பெண் காவற் கைதிகளுக்கும் கடன் குற்றக் கைதிகளுக்கும் உரிய சிறைக்கூடம்.
Hollow-eyed
a. குழிந்த கண்களையுடைய.
Hollow-ground
a. நாவிதன் கத்தியைப்போல் இரண்டு பக்கமும் குழிவான மேற்பரப்புடைய.
Hollow-hearted
a. வாய்மையற்ற மனமுடைய, வஞ்சகமான.
Hollowness
n. பொள்ளான்மை, உட்டுளையுடன் கூடிய நிலை, அகழ்வு, வெறுமை, பொய்மை, வஞ்சகம்.
Hollow-ware
n. குடம்-கெண்டி போன்ற இருப்புக்கலங்களுக்கு வழங்கும் வாணிகப் பெயர், உலோக மங்குக் கலங்களின் தொகுதி.
Holly
n. முள் இலைகளையும் பசிய சிறுமலர்களையும் சிவப்புப் பழங்களையும் உடைய இலையுதிர்க்காத புதர்ச்செடி வகை.
Hollyhock
n. பலநிறப் பெரிய மலர்களையுடைய நெட்டையான செடிவகை.