English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Home-life
n. வீட்டுவாழ்க்கை.
Homelike
a. வீட்டைப்போன்ற, நன்றாயறிந்த, இன்சொல் உடைய, எளிய, இடரற்ற, வசதியான.
Homely
a. வீட்டுக்குரிய, நன்றாயறிபப்பட்ட, சிறப்பற்ற, முனைப்பு வண்ணமற்ற, திருத்தப்படாத, செப்பமற்ற, ஒப்பனையற்ற, செருக்கற்ற, பகட்டற்ற, எளிய, பழம் பாணியிலுள்ள, அழகுமிகுதியற்ற, மட்டான தோற்றமுடைய, அலங்கோலமான.
Home-made
a. வீட்டில் செய்யப்பட்ட, சொந்த நாட்டில் செய்யப்பட்ட, சிறப்பற்ற, பொது எளிமையான.
Homer
n. தொலைவிலிருந்து வீட்டுக்குச் செல்லும் வழியைக் கண்டறிவதற்கு எளிதில் பயிற்றுவிக்கப்படக்கூடிய இனத்தைச் சேர்ந்த புறா, செல்வழி மீளவல்ல விலங்கு, செல்வழி கண்டறியும் திறமை பெற்றுள்ள மனிதர்.
Homeric
a. கிரேக்கப் பெருங்கவிஞரான ஹோமர் (கி.மு.க்ஷ்50) என்பாருக்குரிய, ஹோமரின் பாணியிலுள்ள, ஹோமர் இயற்றியதாகக் கூறப்படும் கவிதைகளுக்குரிய, ஹோமர் பெயராலியலும் கவிதையின் பாணியிலுள்ள, ஹோமரின் பெருந்தகுதிக்கியைந்த, வீரகாவியம் சார்ந்த.
Homerid
n. ஹோமர் வழிவந்தவர்களெனக் கருதப்படும் மரபினருள் அவர் பாடல்களைப் பாடும் ஒருவர்.
Home-ruler
n. தன்னாட்சிக் கோட்பாட்டின் ஆதரவாளர்.
Homesick
a. வீட்டு ஏக்கங்கொண்ட, தாயகத்தை நினைத்துக்கொண்டு சோர்வடைகிற.
Homesickness
n. வீடுபற்றிய ஏக்கம், தாயகப் பிரிவுத்துயர்.
Homespun
n. வீட்டில் நுற்று நெய்யப்பட்ட துணி, (பெ.) வீட்டில் நுற்கப்பட்ட, வீட்டில் செய்யப்பட்ட, அயல்நாடுகளில் செய்யப்படாத, சிறப்பற்ற, சாதாரணமான, அழகற்ற, நேர்த்தியில்லாத.
Homestead
n. வளாகம், வீடுசூழ்பண்ணை, பண்ணை.
Homestretch
n. பந்தய வௌதயின் கடைசிக்கட்டப் பரப்பு.
Home-town
n. பிறந்தக நகரம்.
Hometruth
n. உள்ளத்தில் தைக்கும் மறுக்கவொண்ணு உண்மை.
Homeward
a. வீடுநோக்கிய, வீடு இருக்கும் திசையிலுள்ள, தாயக நோக்கிய, (வினையடை) வீடுநோக்கிய, தாயகம்நாடி.
Homeward-bound
a. வீடுநோக்கிச் செல்கிற, தாயகத்துக்குத் திரும்புகிற.
Homewards
adv. வீடுநோக்கி, தாயகம்நாடி.
Homework
n. வீட்டில் செய்வதற்குரிய வேலை, பள்ளிச் சிறுவர் வீட்டில் எழுதவேண்டிய பாடவேலை.