English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Homogenesis
n. (உயி.) பின்தோன்றல்கள் பெற்றோரைப் போலவே இருந்து அதேமாதிரி வாழ்க்கைப் போக்கை உடைய இனப் பெருக்கமுறை.
Homogenetic, homogenetical
a. பொதுவான மரபு முதல் உடைய.
Homogenity
n. ஓரினத்தன்மை, ஒரே இனமாக அமைதல், ஓரின அமைதி, ஒரே இயல்பினதாக இருத்தல், (கண.) ஒரே சீரான அமைப்பு, உறுப்புகள் முழுதும் ஒத்திருக்கும் நிலை.
Homogenize
v. ஒருபடித்தாயிருக்கும் செய், பாலில் உள்ள கொழுப்பணுக்களை உடைப்பதின் மூலம் அதை நன்றாகச் செரிக்கத் தக்கதாகச் செய், பால்கூறுகளைக் கலந்து செயற்கைப்பால் உண்டாக்கு.
Homogenous
a. பொதுவான முதலிலிருந்து தோன்றியதானால் ஒரு படித்தாயுள்ள.
Homogeny
n. ஒரே முதலினின்றும் தோன்றியதனால் ஏற்பட்ட ஒருபடித்தான நிலை.
Homograph
n. எழுத்துமுறையில் ஒன்றுபட்டுப் பொருள் வேறுபாடுடைய சொல்.
Homoiousian
n. கடவுள் தத்துவத்திலுள்ள தந்தைமையும் மகன்மையும் பொருண்மையால் ஒன்றே என்னும் கோட்பாடு உடையவர், (பெ.) பொருண்மையால் ஒன்றேயான.
Homologate
v. ஏற்றுக்கொள், உறுதிப்படுத்து, சேர்த்துக் கொள்.
Homologize
v. உடனொத்த உறவு கொண்டிரு, ஒத்திசைவாயிரு.
Homologoumena
n. pl. உண்மையானவையென முற்பட்ட கிறித்தவத்திருச்சபையில் எல்லாராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட புதிய ஏற்பாட்டுச் சுவடிகள்.
Homologous
a. உடனொத்த தொடர்புடைய, ஒத்திசைவான.
Homologue
n. மரபுவகையில் ஒன்றுடனொன்று ஒத்திசைவான புள் விலங்குகள் அடங்கிய உயிரினங்களின் உறுப்பு.
Homology
n. அமைப்பொப்பு, உடனொத்திசையும் பண்பு, உருவும் பயனும் ஒவ்வாத இடத்தும் மூலமும் அமைப்பும் உடனொத்தாயிருத்தல்.
Homomorph
n. உருவொத்திசை பொருள், ஒன்றினைப் போலவே உருவமுடைய மற்றொரு பொருள்.
Homomorphic
a. உருவொத்த, ஒத்த வடிவமுள்ள, தன்மை வேறுபட்டும் வடிவு ஒத்த.
Homomorphosis
n. (வில.) இழந்த உறுப்பு முதல் வடிவிலேயே மீளவும் தோன்றுதல்.
Homonomous
a. (உயி.) ஒத்த வளர்ச்சி விதிக்குட்பட்ட.
Homonym
n. பொருள் வேறுபட்டு ஒலிவடிவம் ஒத்தசொல், பெயர்க்குரிய முற்சுட்டுமுதல், (உயி.) பிற முற்சுட்டுமுதல் கருதிப் புதிய இனம் அல்லது வகைக்குப் பொருந்தினும் மறுக்கப்படும் சொல்.
Homonymic
a. சொற்சுட்டுமுதலுக்குரிய.