English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Hone
n. சாணைக்கல், சவரக்கத்தி முதலியன தீட்டுவதற்கான தீட்டு கல், (வி.) சாணையில் தீட்டு.
Honest
a. நேர்மையான, சொல்லிலும் செயலிலும் உண்மையான, பொய்யற்ற, ஏமாற்றாத, கரவற்ற, கபடமற்ற, ஆதாயம் முதலியவை வகையில் அறநெறியில் ஈட்டப்பெற்ற, பொருள்கள் வகையில் கலப்படமற்ற, அப்பட்டமான.
Honestly
adv. நேர்மையாக, உண்மையாக.
Honesty
n. நேர்மை, உண்மை, வாய்மை, கண்ணியம், கபடமின்மை, பளிங்கனைய விதை உறைகளையும் ஊதா மலர்களையும் உடைய செடிவகை.
Honey
n. தேன், மலர்த்தேன், இனிமை, காதலி, அருமை விளிக்குறிப்பு, (வி.) இனிப்பாக்கு, மனதுக்குகந்ததாக்கு.
Honey-badger
n. வளைதோண்டி வாழும் கரடியின விலங்கு வகை.
Honey-bag
n. தேனீ தேன் வைத்திருக்கும் உணவுக்குழற்பகுதி.
Honey-bear
n. காட்டுத் தேனீக்களின் கூண்டினையழித்துத் தேன் களவாடும் கரடியின விலங்குவகை.
Honey-bird
n. மரத்திலிருந்து மரம் தாவித் தேனிருக்கும் இடத்தை மனிதர்கட்குக் காட்டுவதாகக் கருதப்படும் ஆப்பிரிக்கப் பறவை வகை.
Honey-buzzard
n. தேனீக்களின் முட்டைப் புழுக்களைத் தின்னும் பெரும்பறவை வகை.
Honeycomb
n. தேனடை, தேனிறால், தேன்கூடு, துப்பாக்கி வடு, அறுகோண அமைப்புடைய அணி ஒப்பனைப் பொருள், (வி.) தேனிறால்போல் ஆக்கு, நிரம்புக் குழிவுகள் விழப்பண்ணு, கீழறு, அழி.
Honeycomb-moth
n. இளந்தேனீக்களைக் கொல்லும் முட்டைப்புழுக்களை ஈனும் அந்துப்பூச்சி வகை.
Honey-crock
n. தேன்குடம்.
Honey-dew
n. செடிகளின்றும் கசியும் இனிய சுரப்புப் பொருள், அமுதம், வெல்லப்பாகில் ஊறவைக்கப்பட்ட நேர்த்தியான புகையிலை வகை.
Honey-eater
n. பெரிய ஆஸ்திரேலிய இனப் பறவை வகை.
Honeyed
a. தேன் தடவிய, இனிப்பான, கவர்ச்சியுள்ள, புகழ்ந்து பசப்புகிற.
Honeymoon
n. தேன்நிலவு, புது மணமக்கள் மகிழ்ச்சியோடு கழிக்கும் ஓய்வு நாட்கள், (வி.) தேன்நிலவுக் காலத்தைக் கழி.
Honey-mouthed
a. இனிக்கும் பேச்சுடைய, இன்சொல் உடைய.
Honey-stone
n. பழுப்பு நிலக்கரியுடன் காணப்படும் மிக மென்மையான மஞ்சள்நிறக் கனிப்பொருள் வகை.