English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Hosier
n. காலுறை விற்பவர், பின்னப்பட்ட உள்ளுடை விற்பவர்.
Hosiery
n. முழுநீளக் காலுறைகளின் தொகுதி, பின்னப்பட்ட உள்ளாடைத் தொகுதி.
Hospice
n. பிரயாணிகள் தங்குமனை, சமய நிறுவனங்களால் நடத்தப்படும் வழிப்போக்கர் விடுதி, இயலாரகம், பிணியாளர் பேணகம்.
Hospitable
a. வேளாண்மைப் பண்புடைய, விருந்தோம்புகிற, கொடுக்கிற, ஈகைப்பண்புயை.
Hospitage
a. விருந்தினரிடமிருந்து எதிர்பார்க்கப்படவேண்டிய பண்பு.
Hospital
n. மருத்துவமனை, காயமுற்றோர்களையும் நோயாளிகளையும் பேணும் மனை, அறநிலையம், அறமுறைக் கல்வி நிலையம், முற்கால வழிப்போக்கர் தங்குமனை, படைவீரத் துறவிகள் குழுவினர் தங்கு நிறுவனம்.
Hospitaler
n. உதவி செய்யும் பண்புள்ள சமயப் பிரிவின் உறுப்பாளர், லண்டன் நகர மருத்துவ மனைகளில் சமயக் குருக்கள் குழுவினர், 104க்ஷ்-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட படைவீரத் துறவிகள் குழு.
Hospitalism
n. மருத்துவ மனைகளின் அமைப்புமுறை, மருத்துவமனை அமைப்பு முறையின் நலவழிக் குறைபாடுகள்.
Hospitality
n. விருந்தோம்பும் பண்பு, வேளாண்மைக் குணம்.
Hospitalize
v. மருத்துவமனையில் சேர், மருத்துவமனையில் கட்டுப்படுத்தி வை, மருத்துவமனைக்கு அனுப்பு.
Hospodar
n. முற்கால ருமேனிய நாட்டு வழக்கில் பெருமகன்.
Host
-1 n. தொகுதி, பெருந்திரள், படை, கணம், பெருங்கூட்டம், மிகுந்த எண்ணிக்கையுடைய குழு.
Host
-2 n. விருந்தளிப்பவர், ஓம்புநர், பிறரை ஆதரிப்பவர், குடியிருக்கும் இடத்துக்கு உடையவர், சத்திரம் வைத்திருப்பவர், (உயி.) ஒட்டுணி உயிர்களுக்கு இடமான விலங்கு, ஒட்டுணிக்கு ஆதாரமான செடி இனம்.
Host
-3 n. தெய்வத் திருவிருந்தில் இறைவனுக்காக நேர்ந்து விடப்பட்ட அப்பம்.
Hostage
n. பிணையாக நிறுத்தப்பட்டவர், பிணையாக நிறுத்தப்படும் நிலை.
Hostel
n. மாணவர் இல்லம், மாணவர் போன்ற தனி வகுப்பினர் தங்கு விடுதி.
Hostelry
n. வழிமனை, சாவடி, தங்கல்மனை.
Hostess
n. விருந்தினரை உபசரிக்கும் பெண், விருந்தோம்பும் பண்புள்ளவன், தங்கல் மனைத் தலைவி, விடுதித் தலைவி.
Hostile
a. எதிரியைச் சார்ந்த, எதிர்ப்புணர்ச்சியுள்ள, எதிர்க்கின்ற, போர் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ள, போர் நிகழ்ச்சிகள் சார்ந்த.