English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Hovel
n. திறந்த கொட்டில், தொழுவம், அழுக்கடைந்த குடில், காளவாய் உள்ள கூர்ங்கோணக் கட்டிடம்.
Hoveller
n. சட்டப்படி இசைவு பெறாத கரையோரப் படகோட்டி, அரசியல் இணக்கம் பெறாது கப்பல் அழிபாட்டை அணுகுபவர், சிறு கரையோரப் படகு.
Hovel-post
n. தானியக் குவியலைத் தாங்கும் கம்பம்.
Hover
n. அந்தர நிலை, பறவைகளின் சிறகு விரித்து வானில் மிதந்து அமையும் நிலை, தொங்கல் நிலை, தயக்க நிலை, (வி.) சிறகு விரித்து வானில் மிதந்தமை, தொங்கல் நிலைகொள், சுற்றி வட்டமிடு, அருகாக ஊடாடு, சுற்றித் திரி, தயங்கு, ஊசலாடு.
Hoverplane
n. மீவானுர்தி.
How
n. செய்வகை, செய்முறை, எவ்வாறவ்வாறு, (வினையடை) எப்படி, எவ்வாறு, எவ்வகையில், எந்த அளவில், எந்த அளவுக்கு, எந்தரத்தில், எப்படி என்று, எவ்வாறவ்வாறு.
Howbeit
conj. எனினும், என்றாலும்.
Howdah
n. அம்பாரி, யானைமீது ஒருவர் அல்லது இருவர் உட்காரக்கூடிய மேல்விதானமுள்ள இருக்கை.
However
adv. எப்படியாவது, எந்த அளவிலாவது, எவ்வகையிலேனும், ஆயினும்.
Howitzer
n. குட்டையான பீரங்கிவகை, முற்றுகையிலும் அகழ்ப்போர்களிலும் செங்குத்தான கோணங்களில் தாக்குவதற்குப் பயன்படும் குட்டையான பருத்த துப்பாக்கி வகை.
Howl
n. ஊளை, நாய் ஓநாய் நரி முதலியவற்றின் கூக்குரல், வலி தாங்க முடியாது செய்யும் அலறல், ஏளனமான கூச்சல், கம்பியில்லாத் தந்தியில் ஒலி வாங்கும் கருவியில் ஏற்படும் ஓசை, (வி.) ஊளையிடு, வலியினால் அலறு, கூக்குரலிட்டுக் கெக்கலி, சொற்களை ஊளையிட்டுக்கொண்டே ஒலித்தல் செய்.
Howler
n. தென் அமெரிக்க குரங்கு வகை, (பே-வ.) குதிப்பிடத்தக்க பெரும்புழை.
Howlet
n. (பே-வ.) ஆந்தை, கூகை.
Howling
a. ஊளையிடுகிற, அலறுகிற, கூக்குரலிடுகிற.
Howsoever, howsoever
எவ்வகையான தன்மையிலும், எப்படிப்பட்ட அளவிலாவது.
Hoy
n. குறுந்தொலைப் பாய்மரக் கப்பல் வகை.
Hoy
int. கவனத்தைக் ஈர்க்கும் விளித்தற்குறிப்பு, விலங்கு ஊக்குவிளிக்குறிப்பு, (கப்.) உயர இருப்பவர்களை அழைக்கும் விளிக்குறிப்பு.
Hoya
n. படரும் பல்வண்ண மலர்ச்செடி வகை.
Hoyden
n. ஆண்பிள்ளை போல் நடக்கும் பெண், துடுக்காரவாரப் பெண்.
HTML Document Creator
எச்டிஎம்எல் ஆவணம்