English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Humus
n. இலை தழை மக்கிய சத்துள்ள தோட்டமண்.
Hun
n. ஊணர், 4-ஆம் 5-ஆம் நுற்றாண்டுகளில் ஐரோப்பாவைப் படையெடுத்துக் கொள்ளையடித்த ஆசிய நாடோ டி இனம், இழி வழக்காற்றில் செர்மானியர்.
Hunch
n. முதுகுப்புடைப்பு, கூன், தடித்த திரளை, (வி.) புறங்கவிந்து வளை, கூனுண்டாகும்படி புறங்கவி.
Hundred
n. நுறு, பெருந்தொகை, நுறன் தொகுதி, கூற்றம், வட்டம், இங்கிலாந்து நாட்டின் சிறுதிற உட்பிரிவு, நுறு பொன், நுறு வௌளி, (பெ.) நுறான, நுறு மடங்கான, (பே-வ.) நுறுவதான.
Hundredfold
a. நுறுமடங்கான, நுறு உட்பிரிவுகள் கொண்ட, நுறு முறை மடிக்கப்பட்ட.
Hundred-per-cent
a. முழு நிறைவான.
Hundred-per-center
n. விட்டுக்கொடுக்காத தேசபக்தர், தளர்வுறா நாட்டுப் பற்றாளர்.
Hundreds-and-thousands
n.pl. அழகொப்பனையாகப் பயன்படுத்தப்படும் சிறு இனிப்புப்பண்டங்கள்.
Hundredth
n. நுறு சமப்பகுதிகளில் ஒன்று, (பெ.) நுறாவதான, நுறில் கடைசியான, நுறு சமப்பகுதிகளில் ஒன்றான.
Hundreweight
n. நிறையளவுப் பேரெல்லைக்கூறு, பாரத்தில் இருபதில் ஒரு பகுதி, 112 கல் எடை.
Hung, v. hang
என்பதன் இறந்தகால முற்றெச்ச வடிவம்.
Hung-beef
n. மாட்டிறைச்சியின் உப்புக்கண்டம்.
Hunger
n. பசி, பசியினால் ஏற்படும் களைப்பு, பெருவேட்கை, வேணவா, அமைவின்மை, அவாத்துடிப்பு, (வி.) பசிகொள், உணவார்வம் கொள், ஆர்வத்துடன் நாடு, வேணவாக் கொள், பட்டினிபோடு, உணவுமறு.
Hunger-match
n. பசி ஊர்வலம், வறுமைநிலையைத் தலைவர் கவனத்துக்குக் கொண்டு வருவதற்கான வேலையற்றோர் அணி வகுப்பு.
Hunger-strike
n. சிறைப்பட்டவர்கள் தம் விடுதலைக்காக மேற்கொள்ளும் உண்ணாநோன்பு.
Hungry
a. பசித்திருக்கின்ற, பசித் தோற்றமளிக்கின்ற, பசியை உண்டாக்குகிற, ஆர்வமிக்க, பேராசையுள்ள, வளமற்ற, வறண்ட, கட்டாந்தரையான.
Hunk
n. தடி, வெட்டப்பட்ட பெருந்துண்டு, கோணல்மாணலான துண்டு, முதுகுப்புடைப்பு, கூன்.
Hunnic, Hunnish
ஐரோப்பிய நாடோ டிக் கொள்ளையினத்தைச் சார்ந்த.