English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Hurley
n. அயர்லாந்தின் வளைகோல் பந்தாட்ட வகை, பந்தாட்டத்துக்குரிய வளைகோல்.
Hurlingham
n. செண்டாட்டக் கழகத்தின் தலைமை அலுவலகம்.
Hurly-burly
n. குழப்பம், கொந்தளிப்பு, சந்தடி, கலக்கம்.
Hurrah, hurray
மிகு மகிழ்ச்சி, ஆதரவான மகிழ்ச்சியொலி, (வி.) மகிழ்ச்சிக் குரல் எழுப்பு, மிகு மகிழ்ச்சிக் குறிப்பு, ஆதரவு விளிக் குறிப்பு.
Hurricane
n. சூறாவளி, புயற்காற்று, மேலை இந்தியத் தீவுகளுக்குரிய சுழல் காற்று, கொந்தளிப்பான செய்தி.
Hurricane-bird
n. கப்பற் பறவை.
Hurricane-deck
n. கப்பலின் சிறிய அரைத்தளமேடை.
Hurricane-lamp
n. கூண்டு விளக்கு, வன்காற்றைத் தாங்கவல்ல விளக்குவகை.
Hurry
n. மிகுவிரைவு, மிகுவிரைவில் முடிக்க வேண்டுமென்ற படபடப்பு, விரைவூக்கம், பரபரப்பு, மிகையார்வம், கலவரம், கூட்ட நெருக்கடி, அவசரத்துக்குரிய தேவை, (வி.) பரபரப்புக் கொள், தேவையற்ற விரைவுகாட்டு, படபடப்புடன் செயலாற்று, விரைந்து இட்டுச்செல், அதிரடி செய்து தூண்டு, விரைவுபடுத்து.
Hurry-scurry
n. குழப்ப அவசரம், (வி.) குழம்பி அவசரப்படு, (வினையடை) அவசரக்கோலமாய்.
Hurst
n. குன்றுமேடு, ஆறு கடலிடையேயுள்ள மணல்திடல், காட்டர்ந்த மேடு, காடு.
Hurt
n. ஊறு, காயம், நோவு, தீங்கு, கேடு, (வி.) ஊறுபாடு உண்டுபண்ணு, நோவூட்டு, கேடுசெய், தீங்கிழை, துன்புறுத்து, வருத்தம் உண்டுபண்ணு, ஊறுசெய்.
Hurtful
a. நோவு உண்டுபண்ணுகிற, ஊறுபாடு செய்கிற, கேடான, இழப்பு உண்டுபண்ணுகிற.
Hurtle
n. மோதொலி, சடசடவென்ற ஒலி, (வி.) மோது, வீசி எறி, சடாரென்று தகர்வுறு, சடசடவென்ற ஒலியுடன் செல்.
Hurtless
a. ஊறு விளைவிக்காத, தீங்கிழைக்காத, தீங்கற்ற.
Husband
n. கணவன், அகமுடையோன், செயலாட்சியாளர், சிக்கன ஆட்சியாளர், மேலாளர், (வி.) சிக்கனமாகக் கையாளு, மேலாட்சி செய், கணவனைத் தேடிக்கொடு, கணவனாக இயங்கு, நிலத்தைப் பண்படுத்து.
Husbandry
n. வேளாண்மை, உழவர் நிலை, நிலம் பண்படுத்தும் தொழில், சிக்கன ஆட்சி, கவனிப்பு மிக்க மேலாட்சி.
Hush
n. சந்தடியின்மை, ஓசை நீங்கிய அமைதி, நீர்ப்பாய்ச்சல், நீர்ப்பாய்ச்சலின் இரைச்சல், மேலரிப்பு, அடிநிலப்பாறை தெரியுமளவு மேற்பரப்பிலுள்ள மண்ணை நீர் அலசி விடல், (பெ.) சந்தடியற்ற, அமைதியான, (வி.) சந்தடியடக்கு, அமைதிப்படுத்து, பேசாதிரு, ஓசையடங்கியிரு.
Hush-money
n. வாய்முட்டுக்காசு, மறைவுச் செய்தியைப் புறந்தெரியாதடக்கிவைப்பதற்காகக் கொடுக்கப்படும் பணம்.