English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Hyalite
n. நிறமற்ற ஒண்மணிக்கல் வகை.
Hyaloid
n. கண்ணின் கண்ணாடித்தாள் போன்ற புறப்படலம், (பெ.) கண்ணாடி போன்ற.
Hybird
n. இனக்கலப்பின் வழித்தோன்றல், இனங்கலந்து தோன்றிய செடி, இனங்கலந்து தோன்றிய உயிரினம், (பெ.) இனக்கலப்புப் பிறவியான, இனத்தூய்மையற்ற, இனக்கலப்படமான.
Hybridism
n. பிறிதினக்கலப்பு, இனக்கலப்பு நிலை, இனக்கலப்புப் பண்பு.
Hybridize
v. பிறிதினக்கலப்புக்கு உட்படுத்து, கலப்பினப்பிறவி உண்டுபண்ணு, இனத்துடன் இனம் கல.
Hydatid
n. (மரு.) நோய் நீர் தேங்கியுள்ளமை, இழைக்கச்சைப் புழுவினால் ஆகி அதனை உட்கொண்ட நோய்நீர்த் தேக்கப்பை.
Hyde Park
n. லண்டனில் உள்ள பெரும் பூங்கா, அரசியல் கிளர்ச்சிக் கூட்டங்களுக்கு நிலைக்களமான லண்டன் மாநகரத்து உயர்குடிச் சூழலார்ந்த பூங்காப்பகுதி.
Hydra
n. கிரேக்க புராணக்கதை மரபில் வெட்டவெட்ட வளர்ந்து வரும் பலதலைப்பாம்பு, ஒழித்தற்கரிய ஒன்று, தீராப் பெரும்பழி, நீர்ப்பாம்பு வகை, வெட்டிப் பகுப்பதால் பல்லுயிராகப் பெருகும் இயல்புடைய நன்னீர்வாழ் உயிர் வகை.
Hydra-headed
a. ஒழிக்கப்படமுடியாதபடி அழிக்க அழிக்க விரைந்து வளரும் இயல்புடைய.
Hydrant
n. நெடுநீர்க்குழாய், நீள்குழாயை இணைத்து நீர் கொண்டு செல்லும்படி பெருங்குழாயுடன் பொருந்தும் இணைப்பு வாயினையுடைய நீர்க்குழாய்.
Hydrate
n. தனிமத்துடன் அல்லது மற்றொரு சேர்மத்துடன் நீர் இணைந்த சேர்மப்பொருள், (வி.) தனிமம் அல்லது சேர்மம் வகையில் நீருடன் இணை.
Hydraulic
a. குழாய் வழி செல்லும் நீர்சார்ந்த, கால்வாய் நீருக்குரிய, நீராற்றலால் இயக்கப்படுகிற, இயக்க ஆற்றலுக்குரிய நீர்பற்றிய ஆய்வுத்துறை சார்ந்த.
Hydraulics
n. pl. நீரியல் ஆய்வுத்துறை, குழாய்வழி இட்டுச்செல்லும் நீர்பற்றிய ஆய்வுத்துறை, இயக்க ஆற்றலுக்குரிய குழாய் நீர் பற்றிய ஆய்வுத்துறை.
Hydric
a. (வேதி.) நீரகத்துக்குரிய, நீரகமடங்கிய.
Hydride
n. தனிமத்துடன் நீரகம் இணைந்த சேர்மப்பொருள்.
Hydro
n. நீர் மருத்துவமனை, நீர் மருத்துவ முறையினைப் பின்பற்றும் மருந்தகம்.
Hydrocarbon
n. நீரகம் காரியகம் இணைந்து சேர்மப்பொருள்.
Hydrocephalic, hydrocephalous, a.
மூளைநீர்க்கோவைக்கு உட்பட்ட.
Hydrocephalus
n. மூளைநீர்க்கோவை, தலையில் நீர் தங்கிய கோளாறு.
Hydrochloric
a. நீரகமும் பாசிகமும் உள்ளடங்கலான.