English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Malapropos
n. சமயப் பொருத்தமற்ற பேச்சு, இசைவுக் கேடான நிகழ்ச்சி, (பெயரடை) சமயப் பொருத்தமற்ற, (வினையடை) சமயப் பொருதட்தமற்றதாக.
Malar
n. கன்ன எலும்பு, (பெயரடை) கன்னத்துக்குரிய.
Malaria
n. முறைக்காய்ச்சல், மலைக்குளிர்காய்ச்சல், உடல்ட நலத்துக்குக் கேடான சதுப்புநில நச்சுக்காற்று.
Malay
n. மலாய் மொழி, மலாய் இனத்தவர், மலேயாவிலும் கிழக்கு தீவுக்குழுவிலும் தலைமையாயுள்ள இனத்தின் உறுப்பினர்.
Malayalum
n. மலையாள மொழி.
Malcontent
n. மணக்குறையுடையவர், கிளர்ச்சி ஆதரவாளர், (பெயரடை) மனக்குறை உடைய, கிளர்ச்சி செய்கிற.
Male
n. ஆண், ஆண்பால், (பெயரடை) ஆண்பாலுக்குரிய.
Malediction
n. பழிப்புரை, தெறுமொழி, சாபம்.
Malefaction
n. தீங்கிழைப்பு, பொல்லாங்கு, குற்றம்.
Malefactor
n. கேடுவிளைவிப்பவர், தீங்கிழப்பவர், குற்றவாளி.
Malefic
a. கேடு சூழ்கிற, தீங்கிழைப்பவர், குற்றவாளி.
Maleficent
a. புண்படுத்துகிற, பழி சூழ்கிற வகைகளில் தீங்கு விளைவிக்கிற, தீக்குறியான.
Malevolent
a. தீங்கு விளைவிப்பதில் விருப்பமுடைய, பழியார்வமுள்ள.
Malfeasance
n. (சட்) பொல்லாங்கு, பணியாளர் நெறிதவறிய நடத்தை.
Malformation
n. பொருத்தமில்லாமத உருவ அமைப்பு, செப்பக்கேடு.
Malic
a. (வேதி) பழ வகைகள் சார்ந்த.
Malice
n. வன்மம், மனக்காழ்ப்பு, பகைமை எண்ணம், பழிசூழ் நோக்கு, தொல்லைதரும் விருப்பம், (சட்) தீய நோக்கம், கொலைக் குற்றத்தை மிகுதியாக்கும் மனமார்ந்த வன்ம எண்ணம்.
Malicious
a. கெடு நோக்கான.
Malign
a. தீங்கு விளைவிக்கின்ற, நோய்கள் வகையில் துன்பம் விளைவிக்கிற, (வினை) அவதூறு சொல், புறங்கூறு, பழிகூறு, இழித்துச்சொல்.
Malignancy
n. உக்கிர வேகம், கடு வெறுப்புணர்ச்சி, கடும்பகைமை.