English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Maltese
n. மால்ட்டா தீவின் மொழி, மால்ட்டாவின் குடிவாணர், (பெயரடை) மால்ட்டாவைச் சார்ந்த, மால்ட்டாவின் மொழி சார்ந்த.
Maltha, n.,
கீலும் மெழுகுஞ் சேர்ந்த காரைவகை.
Malt-house
n. வடிதேறலுக்கான மாவூறற் கிடங்கு.
Malthusian
n. மால்தஸ் என்பாரைப் பின்பற்றுபவர், மக்கட் பெருக்கத்தைத் தடுப்பதற்கு ஒழுக்கஞ் சார்ந்த கட்டுப்பாடு வேண்டுமென்ற கோட்பாடுடையவர், (பெயரடை) மால்தஸின் கோட்பாடு உடைய, மக்கட் பெருக்கத்தைத் தடுக்க ஒழுக்கக் கட்டுப்பாடு வேண்டுமென்ற கொள்கை சார்ந்த.
Malting
n. வாற்கோதுமையை மாவூறலாக்குதல், வடிதேறலுக்கான மாவூறற்கிடங்கு.
Maltose
n. (வேதி) மா வெல்லம், மாவூறலிலிருந்து எடுக்குஞ் சர்க்கரை.
Maltreat
v. தவறாக நடத்து, கொடுமைப்படுத்து, துன்புறுத்து.
Maltster
n. மாவூறல் ஆக்குபவர்.
Maltworm
n. மட்டுமீறிச் சாராயங் குடிப்பவர்.
Malvaceous
a. மெல்லிழை இலை தண்டுடைய வண்ணமலர்ச் செடியினஞ் சார்ந்த.
Malversation
n. கெடுநடத்தை, பணித்துறைப் பொறுப்புக்கேடான நடைமுறை, செயலாட்சிக்கேடு, நிதியாட்சிக் கேடு, நிதி மோசடி, இலஞ்சப் பழக்கம், சட்டமீறிய பணப்பறிப்பு.
Mamba
n. ஆப்பிரிக்க மர நச்சுப்பாம்பு வகை.
Mamelon
n. குவடு, வட்ட முகடு.
Mameluke
n. அடிமை, (வர) எகிப்திய அரசுரிமையைக் கி.பி. 1254-இல் கைப்பற்றிய படைவீரர் குழுவில் ஒருவர்.
Mamilla
n. முலைக்காம்பு, முலைக்காம்பு வடிவ உறுப்பு.
Mamma
-2 n. பாலுணிகளின் பால்மடி, ஆண்களின் உடலமைப்பில் பால்மடிக்கு இணையான உறுப்பு.
Mammal
n. பாலுட்டி, கருப்பை உயிர்.
Mammalia
n. pl. பாலுட்டும் உயிரினத்தொகுதி.
Mammalia,n. pl,.
.பாலாட்டும் உயிரினத் தொகுதி.